Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காற்றழுத்த தாழ்வு மையம் எங்கே உள்ளது? இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்..!

Siva
புதன், 16 அக்டோபர் 2024 (07:35 IST)
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மையம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ள நிலையில், கடந்த ஆறு மணி நேரத்தில் மணிக்கு 10 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தற்போது சென்னையிலிருந்து 440 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரியிலிருந்து 460 கிலோ மீட்டர் தொலைவிலும், நெல்லூரிலிருந்து 530 கிலோ மீட்டர் தொலைவிலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தென்கிழக்கு திசையில் மையம் கொண்டுள்ள நிலையில், படிப்படியாக நகர்ந்து சென்னை அருகே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக, சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் உள்ள மாவட்டங்களில் இன்று அதிக கன மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதால், பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.


Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை தாராவியில் விஜய் வசந்த், திருமாவளவன் பிரச்சாரம்.. இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு..!

இண்டிகோ விமானங்களில் முதல்முறையாக பிசினஸ் கிளாஸ் சேவை.. டெல்லியில் இருந்து முதல் விமானம்..!

தனிப்பாடமாக கணினி அறிவியல்.. பள்ளிகளில் கணினி பட்டதாரி ஆசிரியர்கள்: டாக்டர் ராமதாஸ் கோரிக்கை..!

சிறப்பு பேருந்துகளை இயக்கியதால் ரூ.50 கோடி நஷ்டம்: அமைச்சருக்கு சிஐடியு கடிதம்

இடது கண்ணுக்கு பதிலாக வலது கண்ணில் அறுவை சிகிச்சை… மருத்துவர் மீது பகீர் புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments