Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நாடே கண்ணீரில் மூழ்கி இருக்க எடப்பாடி பழனிச்சாமி விருந்து வைப்பதா? மருது அழகுராஜ் கண்டனம்..!

Advertiesment
எடப்பாடி பழனிச்சாமி

Siva

, வியாழன், 24 ஏப்ரல் 2025 (07:27 IST)
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று அதிமுக எம்எல்ஏக்களுக்கு விருந்து வைத்தார். சென்னையில் உள்ள எடப்பாடி பழனிச்சாமியின் கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் இந்த விருந்து நடைபெற்ற நிலையில் அறுசுவை உணவு பரிமாறப்பட்டதாக தெரிகிறது.

 2026 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக எம்எல்ஏக்கள், நிர்வாகிகள், மாவட்ட செயலாளர் ஆகியோர் ஊக்கத்துடன் செயல்பட வேண்டும் என்பதற்காக இந்த  விருந்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிற.

இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் மருது அழகுராஜ், தனது எக்ஸ் பக்கத்தில் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் இது குறித்து கூறியிருப்பதாவது:

தேசத்தையே கண்ணீரில் மூழ்க வைத்த கதறல் ஒலி உலகையே உலுக்கியுள்ள நாளில்..

முதலமைச்சராக இருந்தவர் இன்று எதிர்க்கட்சி தலைவராக இருப்பவர்  
தேசியக்கொடி
கட்டிய காரில்  பயணிப்பவர்

எடப்பாடி தனது
விருந்து கொண்டாட்டத்தை தவிர்த்திருக்க வேண்டும்  .

குறைந்த பட்சம் அதனை
தள்ளிவைத்திருக்க வேண்டும்..

என்ன நாஞ்
சொல்றது..

Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி அளிக்கப்படும்.. அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆவேசம்..!