தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜ இன்று வெள்ளை அறிக்கை தாக்கல் செய்தார். இது தற்போது சமூக வலைதளங்களில் பேசுப்பொருளாக மாறியுள்ளது.
தமிழகத்தில் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடைபெற்று வருகிறது.
தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜ இன்று வெள்ளை அறிக்கை தாக்கல் செய்தார. அப்போது அவர் சுமார் 2 மணிநேரத்திற்கும் மேலாக இதுகுறித்து விளக்கம் கொடுத்தார்.
அதில், தமிழகத்த்ல் 2016 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை ஆண்டு வருவாய் பற்றாக்குறை ரூ.1.50 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளதாகவும், தமிழக அரசின் கடன் சுமை ரூ.5.75 லட்சம் கோடி எனவும் தமிழககத்தில் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும்2. 63 லட்சம் கடன்சுமை உள்ளதாகவும், மத்திய அரசிடம் இருந்து வந்து கொண்டிருந்த 33% வருவாய் குறைந்துவிட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும், ஒரு யூனிட் மின்சாரம் வாங்கி விநியோகிப்பதால் அரசுக்கு ரூ. 2.36% இழப்பு ஏற்படுவதாகவு, தமிழக அரசு வாங்கியுள்ள கடன்களுக்கு மாதம் தோறும் ரூ.87.31 கோடி வட்டி கட்டி வருவதாகவும், மின்சாரம் மற்றும் போக்குவரத்தில் மாநில அரசிற்கு ரு.2 லட்சம் கோடி இழப்பு ஏற்படுவதாகத் தெரிவித்துள்ளார்.