திருநெல்வேலியில் புகழ்பெற்ற இருட்டுக்கடை அல்வா ஸ்தாபனத்தின் உரிமை தொடர்பாக வாரிசுகளிடையே மோதல் எழுந்துள்ள நிலையில் மற்றுமொரு பொது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
திருநெல்வேலியில் உள்ள இருட்டுக்கடை அல்வா தேசிய அளவில் பிரசித்தி பெற்றதாக உள்ளது. தற்போது இந்த இருட்டுக்கடையை கவிதா சிங் நடத்தி வருகிறார். சமீபத்தில் கவிதா சிங்கின் மகளுக்கு திருமணமான நிலையில் இருட்டுக்கடை உரிமையை அவர்கள் எழுதி கேட்டு மிரட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது.
அதைத் தொடர்ந்து இருட்டுக்கடையின் உரிமையாளரான பிஜிலி சிங் எழுதிய உயிலின் படி, இருட்டுக்கடை தனக்குதான் சொந்தம் என கவிதா சிங்கின் சகோதரர் நயன் சிங் பொது அறிவிப்பை வெளியிட்டார். அதை தொடர்ந்து ப்ரேம் ஆனந்த் சிங் தவறான தகவல்களை பரப்புவதாக கவிதா சிங் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த உரிமை விவகாரத்தில் தற்போது கவிதா சிங் தரப்பில் மற்றுமொரு பொது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், பிரேம் ஆனந்த் சிங் அடிப்படை ஆதாரமற்ற பொய் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருவதாகவும், இருட்டுக்கடை சொத்துகளை அபகரிக்கும் நோக்கில் அவர் செயல்பட்டு வருவதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் பிரபலமான ஸ்தாபனமான இருட்டுக்கடை இப்படி வாரிசுகள் தகராறில் சிக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edit by Prasanth.K