ஒட்டுமொத்த நடிகர்களுமே இந்த ஆட்சியை எதிர்ப்பது ஏன்? அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கேள்வி
, ஞாயிறு, 11 நவம்பர் 2018 (18:27 IST)
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் , சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது.
இந்நிலையில் அதிமுக சார்பில் தேர்தல் பணி ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. இதில் பேசிய தமிழ் நாடு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் டிடிவி தினகரனை கடுமையாக விமர்சித்தார். சர்கார் பட விவகாரம் குறித்தும் பேசினார். சர்கார் தொடர்பாக அவர் கூறியதாவது: "இன்றைக்கு திரைப்படத்தில் யார் எது சொன்னாலும் ஏற்றுக் கொள்ளலாம் என்றால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் .இன்றைக்கு ஒட்டு மொத்தமாக அத்தனை நடிகர்களும் சேர்ந்து இந்த ஆட்சியை எதிர்பார்ப்பது ஏன்? எதிர்க்க வேண்டிய அவசியம் என்ன? திரைப்படத்தில் ஊழலைப் பற்றி பேசுபவர்கள் ஊழல் இல்லாமல் இருக்கவேண்டும் அல்லவா ?
இன்றைக்கு நடிகர்கள் வாங்குகின்ற சம்பளம் எவ்வளவு ?அவர்கள் கட்டுகின்ற வரி எவ்வளவு ?இதைப்பற்றி தெளிவுபடுத்தினால் இன்றைக்கு நடிகர்கள் பற்றிய அனைத்து உண்மையும், யோக்கிதையும் வெளிவந்து விடும். அரசாங்கத்தை எதிர்ப்பது என்ற பெயரில் யாரோ போடுகின்ற பணத்தில் எடுக்கும் படத்தில் பணத்தை வாங்கிக்கொண்டு நடித்துவிட்டு கருத்தைச் சொல்கிறார்கள் .இது எப்படி சரியாக இருக்கும்" இவ்வாறு கடுமையாக விமர்சித்தார்.
அடுத்த கட்டுரையில்