கமல்ஹாசன் இன்று காலை திடீரென களத்தில் இறங்கியது குறித்துதான் அனைத்து ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன. கமல் நடிகர் மட்டுமே. அவர் எம்.எல்.ஏ, எம்பி உள்பட எந்த பதவியும் இல்லாதவர். குறைந்த பட்சம் ஒரு அரசியல் கட்சி தலைவர் கூட இல்லை. அவர் களப்பணி செய்வதால் என்ன மாற்றம் அந்த பகுதியில் ஏற்பட்டுவிட போகிறது என்பதே பலரது கேள்வியாக உள்ளது.
இந்த நிலையில் கமலின் களப்பணி குறித்து பிரபல அரசியல் விமர்சகர் ஒருவர் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கூறியபோது, 'கமல் மீது வைக்கப்படும் ஒரு முக்கிய குற்றச்சாட்டு அவர் டுவிட்டரில் மட்டுமே அரசியல் செய்கிறார் என்பதுதான். அந்த விமர்சனத்தை நிறுத்தும் வகையில் அவர் களத்தில் இறங்கியிருக்கலாம்.
இந்த ஒரு களப்பணியை மட்டும் வைத்து கொண்டு அவர் அரசியலில் குதிப்பார் என்றும் தொடர்ந்து களப்பணி ஆற்றுவார் என்றும் கூற முடியாது. அவரது அடுத்தடுத்து நடவடிக்கைகளை பொறுத்துதான் எதுவும் கூற முடியும் என்று கூறினார்.