டெங்கு காய்ச்சலை குணப்படுத்தும் என்று நம்பப்படும் நிலவேம்பு கசாயத்தை தமிழக அரசும், தனியார் சமூகநல அமைப்புகளும் வழங்கி வருகிறது. இதேபோல் பெரிய நடிகர்களின் ரசிகர்களும் நிலவேம்பு கசாயத்தை பொதுமக்களுக்கு வழங்கினர்.
இந்த நிலையில் தனது ரசிகர்கள் நிலவேம்பு கசாயத்தை வழங்க வேண்டாம் என்றும் இதுகுறித்த ஆய்வு வரும்வரை பொறுமை காப்போம்' என்றும் தனது டுவிட்டரில் குறிப்பிட்டார்.
கடந்த சில மாதங்களாக அரசுக்கு எதிராக ஆவேச கருத்துக்களை தெரிவித்து பெரும் பாராட்டுக்களை பெற்ற கமல்ஹாசன் இந்த ஒரே டுவிட்டால் பலரது கண்டனங்களுக்கு ஆளானார். அதுமட்டுமின்றி இதுகுறித்து அவர் மீது மதுரை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றும் பதிவு செய்யப்பட்டது
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, நிலவேம்பு கசாயம் விஷயத்தில் கமல்ஹாசன் மீது வழக்கு தொடர முகாந்திரம் இருந்தால் தாராளமாக வழக்கு தொடரலாம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே கமல் மீது இதுகுறித்து விரைவில் வழக்கு தொடர வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.