அதிமுக ஓபிஎஸ் பிரிவுக்கு நான்கு தொகுதிகள் தருவதாக முதலில் பாஜக வாக்குறுதி கொடுத்திருந்ததாகவும் ஆனால் பாமகவுடன் கூட்டணி முடிந்து விட்டதால் ஒரு தொகுதி மட்டுமே தர முடியும் அந்த தொகுதியில் நீங்களே தனி சின்னத்தில் போட்டியிடுங்கள் என்று பாஜக அசால்டாக கூடியதாகவும் ஓபிஎஸ் தனது நெருக்கமான வட்டாரங்களில் புலம்பி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஓபிஎஸ் சமீபத்தில் தனது ஆதரவாளர்களுடன் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் ஒரு சீட் மட்டுமே தருவேன் என்று சொல்லிவிட்டார்கள், எனவே நாம் கூட்டணிக்கு ஆதரவு என்று மட்டும் சொல்லிவிட்டு தேர்தலில் இருந்து விலகி விடலாமா என்று ஆலோசனை கேட்டிருக்கிறார்
ஆனால் தேர்தலில் போட்டியிட்டால் தான் இரட்டை இலை சின்னத்தை முடக்க முடியும் என்றும் ஒரு சீட்டாக இருந்தாலும் நாம் களம்பிறங்கியாக வேண்டும் என்றும் நீங்களே போட்டியிடுங்கள் என்று பண்ருட்டி ராமச்சந்திரன் ஆலோசனை கூறியதை அடுத்து ராமநாதபுரத்தில் ஓபிஎஸ் போட்டியிட இருப்பதாக கூறப்படுகிறது
இதனை அடுத்து தான் ராமநாதபுரத்தில் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுவதாக ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்