இன்றைய காலத்தில் கூகுள் மேப்பின் உதவி பெரும்பாலானவர்களுக்கு தேவைப்படுகிறது. புதிய இடத்திற்கு வந்த புதியவர்களுக்கு இடத்தை சரியாக காட்ட இந்த கூகுள் மேப் பயன்படுகிறது.
இந்நிலையில், மயிலாடுதுறை லால் பகதூர் நகரைச் சேர்ந்தவர் ஆர் சந்திரசேகரன். இவர் தினமும் வேலைக்குச் சென்று வீட்டுக்குத் திரும்பியதும் அவரது ஸ்மார்ட் போனை வாங்கி அதில் கூகுள் மேப்பில் யுவர் டைம் லைன் என்றா செயலியை பார்ப்பது அவரது மனைவியின் வழக்கம்.
ஆனால், சந்திரசேகர் செல்லாத பகுதிகளுக்குச் சென்ற மாறி கூகுள் மேல் காட்டுவதாகவு, இதனால் அவரது மனைவி இரவில் தூக்கம் இல்லாமல் தவிப்பதுட குடும்பத்தில் உள்ளவர்களையும் பாதிப்பில் ஆழ்த்துவதாகவும் அதனால் குடும்பத்தில் குழப்பம் ஏற்படுத்துவதாகவும், தன் மனைவிக்கு கவுன்சிலிங் கொடுத்த அழைத்துச் சென்றாலும் தனது மனைவி அதை ஏற்றுக் கொள்ள மறுப்பதாகவும் கூறி கூகுள் மேப் நிறுவனத்தின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டியும் நஷ்ட ஈடு கோரியும் சந்திரசேகரன் மயிலாடு காவல்நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார்.
இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.