ஜூலை மாதத்திற்குள் மின்சாரக் கட்டண உயர்வு இருக்கக்கூடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தமிழக மின்வாரியத்துக்கு புதிய கட்டண உயர்வை பரிந்துரைத்துள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது நடைமுறையில் உள்ள விதிப்படி, ஆண்டுதோறும் கட்டணத்தை சில சதவீதம் உயர்த்தும் நடைமுறை பின்பற்றப்படுகிறது. கடந்த 2022-ஆம் ஆண்டு மிகப்பெரிய அளவில் உயர்த்தப்பட்ட கட்டணங்கள், 2023-இல் சுமார் 2.18% மற்றும் 2024-இல் 4.8% உயர்த்தப்பட்டன.
அந்த வகையில் இந்த ஆண்டும் ஜூலை மாதத்தில் 3% முதல் 3.16% வரை கட்டண உயர்வு அமலாக்கப்படலாம் எனத் தெரிய வருகிறது. இது வீடு, வணிகம், தொழிற்துறை ஆகிய எல்லா பயன்பாடுகளிலும் பொருந்தும்.
மின்வாரியத்தின் கடன் சுமையை குறைத்து, வருமானத்தை உயர்த்த வேண்டிய தேவையின் அடிப்படையில் இந்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், "முடிவுகளை முதல்வர் ஆலோசனைக்கு பிறகே எடுப்பார். ஜூலை 1க்குள் அறிவிப்பு வெளியாகும் வாய்ப்பு உள்ளது" என்றனர்.
மின் கட்டண உயர்வு உண்மையாகவே அமலுக்கு வந்தால், மக்கள் செலவுகள் மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.