சென்னையில் மாஸ்க் அணியாமல் நடந்து சென்றால் ரூ.100 அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி அறிவிப்பு.
நாடு முழுவதும் நேற்று வரை 21 நாட்கள் கொரோனா பாதுகாப்பு காரணங்களுக்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதை தொடர்ந்து தற்போது மேலும் 19 நீட்டித்து மே 3 வரை ஊரடங்கு அமலில் உள்ளது.
இந்நிலையில் இரண்டாம் கட்ட ஊரடங்கை மாவட்ட நிர்வாகங்கள் கடுமையான விதிமுறைகளோடு செயல்படுத்த தொடங்கியுள்ளன. சேலம் மாவட்டத்தில் மாஸ்க் இல்லாமல் வீட்டை விட்டு வெளியே வந்தால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, சென்னையில் மாஸ்க் அணியாமல் வாகனம் ஓட்டினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும், 6 மாதத்திற்கு வாகன ஓட்டுநர் உரிமமும் ரத்து செய்யப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ள நிலையில் தற்போது சென்னையில் மாஸ்க் அணியாமல் நடந்து சென்றால் ரூ.100 அபராதம் விதிக்கப்படும் என அறிவித்துள்ளது.