ஈரோடு பகுதியில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிரச்சாரம் செய்தபோது எனக்கு மகளிர் உதவி தொகை கிடைக்கவில்லை என காய்கறி வியாபாரம் செய்யும் பெண் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திமுக தனது தேர்தல் அறிக்கையில் அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூபாய் 1000 உரிமை தொகை வழங்கப்படும் என்று கூறிய நிலையில் அதன் பின் தகுதி உள்ள பெண்கள் என ஒரு சில பெண்களுக்கு மட்டுமே கொடுத்து வருவதாக குற்றச்சாட்டு கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் முதல்வர் இன்று ஈரோட்டில் தேர்தல் பிரச்சாரம் செய்தபோது பிளாட்பாரத்தில் காய்கறி கடை நடத்தி வரும் ஒரு பெண் தனக்கு மகளிர் உரிமை தொகை கிடைக்கவில்லை என்று முதல்வரிடம் குற்றச்சாட்டு தெரிவித்தார்.
அப்போது ஏதாவது காரணமாகத்தான் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு இருக்கும் என்று முதல்வர் கூறிய போது எனது கணவர் அரசு பணியாளர் என்று அந்த பெண் கூறினார்/ ஆனால் அதே நேரத்தில் எனது கணவர் சாப்பிட்டால் போதுமா? நான் சாப்பிட வேண்டாமா? அவர் வயிறு நிறைந்தால் எனது வயிறு நிறைந்து விடுமா என முதல்வரிடம் அந்த பெண் கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.