மாங்கல்ய தோஷம் கழிப்பதாகக் கூறி நகைகளைப் பறித்த போலி சாமியாரை போலீஸார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் வசித்து வருபவர் கிரிஜா. இவருக்கு சுஜிஜா என்ற பெண்ணுடன் நட்பு ஏற்பட்டுள்ளது. சுஜிதா தன்னை ஒரு சாமியார் எனக் கூறியதால், கிரிஜாவின் 2 மகள்களுக்கு மாங்கல்ய தோஷம் இருப்பதாகவும் அதனால் திருமணமாவதில் தடை ஏற்படலாம் எனக் கூறியுள்ளார். இதை நம்பிய கிரிஜா, சுஜிதாவின் கூற்றுப்படி பரிகார பூகைக்காக நகைகளைக் கொடுத்துள்ளார். இதையடுத்து ஏமாற்றிப் பணம் பறித்த சுஜிதாவை போலீஸார் கைது செய்துள்ளனர்.