டிக்டாக் செயலியில் தலித் சமூக பெண்கள் பற்றி தவறான வார்த்தைகளில் பேசிய பெண் கைது வழக்கறிஞரின் ஒருவரின் புகாரை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த டி சுதா என்பவர் டிக்டாக்கில் அடிக்கடி வீடியோ வெளியிடுபவர். இவர் சமீபத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்றில் தனது சமூகத்தை உயர்வாகப் பேசியும் தலித் பெண்களைப் பற்றித் தரக்குறைவாகவும், அரசின் இட ஒதுக்கீட்டுக் கொள்கையை மோசமாக விமர்சித்தும் இருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இதையடுத்து மணிகண்டன் என்ற வழக்கறிஞர் கொடுத்த புகாரின் படி அந்தப் பெண் கைது செய்யப்பட்டு திருநெல்வேலி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.