வங்க கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களில் கன மழை பெய்து வரும் நிலையில் ஐந்து மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுத்து சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கன்னியாகுமரி திருநெல்வேலி தூத்துக்குடி இராமநாதபுரம் தென்காசி ஆகிய ஐந்து மாவட்டங்களில் ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாகவும் அதேபோல் டெல்டா மற்றும் தென் கடலோர மாவட்டங்களில் உள்ள ஐந்து மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்க கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை இலங்கையில் கரையை கடந்த நிலையில் அதன் தாக்கம் தமிழகத்தில் இருப்பதால் தமிழகத்தில் உள்ள தென் மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும் கன மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது