சென்னை முகப்பேரில் மின் இணைப்புக்கு லஞ்சம் வாங்கிய ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை முகப்பேர் மேற்குப்பகுதியில் வசிப்பவர் விவேக் குமார்,இவர் தன் தாயார் வசித்து வரும் வீட்டின் 2 வது மாடியிலுள்ள கட்டிடத்திற்கு மின் இணைப்பு வழங்குவதற்காக ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளார்.
இதற்குத் தேவையான ஆவணங்கள் அனைத்தையும் அவர் சமர்ப்பித்த நிலையில், அங்குள்ள மின்வாரிய அலுவலகத்திற்குச் சென்று இளநிலை பொறியாளர் கோதண்டராமன் என்பவரைச் சந்தித்தார். அப்போது, அவர் தனக்கு ரூ.10,000 லஞ்சம் கொடுத்தால் கொடுப்பதாக கூறியதாக தெரிகிறது.
இதுகுறித்து, விவேக் விஜிலென்சில் புகார் அளித்தார். எனவே, ரசாயன பொடி தடவிய பணத்தாள்களை விவேக்கிடம் கொடுத்து, அதனை லஞ்சமாகக் கொடுக்கும்படி கூறியுள்ளார் லஞ்ச ஒழிப்புத் துறையினர்.
பின், கோதண்டராமனுக்கு ரூ.10 ஆயிரம் பணத்தைக் கொடுத்த போது, லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனனர்.