Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

மூதாட்டியை கொலை செய்த வழக்கு ; திருமணமான 3 நாளில் இளம்பெண் சிறையில் அடைப்பு

மூதாட்டியை கொலை செய்த வழக்கு ; திருமணமான 3 நாளில் இளம்பெண் சிறையில் அடைப்பு
, புதன், 1 நவம்பர் 2017 (13:44 IST)
மூதாட்டியை கொலை செய்த வழக்கில், திருமணம் முடிந்த 4வது நாளில் புதுப்பெண்ணிற்கு ஆயுள் தண்டை அளித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


 

 
திருச்சியில் மலைக்கோட்டை பகுதியில் உள்ள பட்டவர்த் சாலையில் வசித்து வந்தவர் முத்துரத்தினாவதி(80). இவரின் வீட்டின் மாடியில் திவ்யபிர்யா(250 என்ற இளம்பெண் வாடகைக்கு குடியிருந்தார். இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.
 
ஏற்கனவே இவருக்கும், முத்துரத்தினாவாதிக்கும் இடையே வீட்டை பராமரிப்பது தொடர்பாக அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. 
 
அந்நிலையில், கடந்த 2015ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2ம் தேதி, வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி, மாடிக்கு சென்றுள்ளார். அப்போது, திவ்யபிரியா செல்போனில் யாருடனோ பேசிக்கொண்டிருந்தார். அதைக் கண்ட அவர் ‘ நீ அடிக்கடி யாருடனோ செல்போனில் அதிக நேரம் பேசுகிறாய். இதுபற்றி உனது அம்மாவிடம் கூறுகிறேன்’ எனக் கண்டித்து விட்டு கீழே உள்ள தனது வீட்டிற்கு சென்றுவிட்டார்.
 
இதனால் ஆத்திரம் அடைந்த திவ்யபிரியா, மூதாட்டின் வீட்டிற்கு சென்று அவரை தாக்கியதோடு, கீழே தள்ளி இரும்பு கம்பியால் வயிற்றுப்பகுதியில் குத்தியுள்ளார். இதில், முத்துரத்தினவாதி பரிதாபமாக உயிரிழந்தார்.
 
எனவே, இந்த கொலையிலிருந்து எப்படி தப்பிப்பது என யோசித்த திவ்யபிரியா, மூதாட்டியின் காது மற்றும் கழுத்தில் இருந்த எட்டரை பவுன் நகையை பறித்து அருகில் இருந்த சாக்கடையில் வீசினார். அதன்பின், நகைக்காக கொள்ளையர்கள் உள்ளே புகுந்து மூதாட்டியை கொலை செய்து விட்டனர் என மூதாட்டியின் மகன் மற்றும் மருமகளிடம் நாடகம் ஆடினார்.

webdunia

 

 
இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். அப்போது, அந்த தெருவில் இருந்த சிசிடிவி கேமராவில் திவ்யபிரியா மூதாட்டியின் வீட்டிற்குள் செல்வதும், பின் வெளியேறுவதும் பதிவாகியிருந்தது. இதன் மூலம் அவர்தான் குற்றவாளி என்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.
 
இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார் திருச்சி மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, திவ்யபிரியாவிற்கு ஆயுள் தண்டனை அளித்து தீர்ப்பளித்தார்.
 
இதைத் தொடர்ந்து திவ்யபிரியா திருச்சி மகளிர் தனி சிறையில் அடைக்கப்பட்டார். 3 நாட்களுக்கு முன்புதான் அவருக்கு காதல் திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆண் நண்பர்களுடன் பர்த்டே பார்ட்டி: பள்ளி மாணவிகளின் தலையை துண்டிக்க உத்தரவு!!