தமிழக சட்டசபை கூட்டத்தொடர் வரும் 09 ஆம் தேதி வரை நடத்துவதற்கு அலுவல் ஆய்வுக் குழு முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது.
அதன்படி ஒவ்வொரு ஆண்டும் சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கும் என்பதால் இவ்வருடமும் அவ்வாறு தொடங்கப்பட்டது.
இந்தக் சட்ட சபை கூட்டத்தொடர் வரும் 9 ஆம் தேதிவரை நடத்துவதற்க்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று சட்டசபையில், இன்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது :
மீன் அதிகமாகச் சாப்பிட்டால், புற்றுநோய் உள்ளிட்ட எந்த நோயும் வராது; மீன் தொழிலுக்கு அரசு மானியம் வழங்க தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.
மேலும், இளைஞர்கள் படித்து முடித்ததும் அரசு பணியில் சேர ஆசைப்படாமல் தொழில் முனைவோராக முயற்சி செய்ய வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் அறிவுறுத்தினார்.