மொழி சம்பந்தமாக ஸொமாட்டோ நிறுவனம் அளித்த பதில் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் ஸொமாட்டோ நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.
மதுரையைச் சேர்ந்த ஒருவர் உணவு டெலிவரி வழங்கும் நிறுவனமான ஜொமைட்டோவிடம் ஆர்டர் செய்த உணவில் பாதிக்குமேல் வரவில்லை என்று புகார் செய்தார். மேலும் அவர் கஸ்டமர் கேரை தொடர்பு கொண்ட போது உங்களுக்கு பிரச்சினையை விளக்க இந்தியில் விளக்கத் தெரியவில்லை. இந்தியாவில் இருந்துகொண்டு தேசிய மொழியான ஹிந்தி தெரியாமல் ஏன் இருக்கிறீர்கள்? அதனால் உங்களுக்கு பணம் திரும்பக் கிடைக்காது என கூறியதாக தெரிகிறது.
இதனை அந்த நபர் தனது டுவிட்டரில் இதுகுறித்து பதிவு செய்துள்ள நிலையில் ஜொமைட்டோ நிறுவனத்திற்கு எதிராக பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து மன்னிப்புடன் கூடிய விளக்கம் அளித்துள்ள ஸொமாட்டோ நிறுவனம் “வணக்கம் தமிழ்நாடு, எங்கள் கஸ்டமர் கேர் முகவரின் நடத்தைக்காக நாங்கள் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். மாறுபட்ட கலாச்சாரத்தின் மீது எதிர்கருத்து தெரிவித்த அந்த ஊழியரை பணிநீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளோம். சிறப்பான சேவையை என்றும் மக்களுக்கு அளிக்க காத்துள்ளொம்” என தெரிவித்துள்ளது.