Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

நாங்கள் எந்தக் கூட்டணியிலும் இல்லை – அதிமுக இரட்டை நிலைப்பாடு ?

நாங்கள் எந்தக் கூட்டணியிலும் இல்லை – அதிமுக இரட்டை நிலைப்பாடு ?
, வெள்ளி, 8 பிப்ரவரி 2019 (13:08 IST)
அதிமுக வின் மத்திய அமைச்சரும் மக்களவைத் துணை சபாநாயகருமான தம்பித்துரை தங்கள் கட்சி இதுவரையிலும் எந்தக் கூட்டணியிலும் சேரவில்லை எனக் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக-காங்கிரஸ்-விசிக-மதிமுக-இடது சாரிகள் அடங்கியப் பலமானக் கூட்டணி உருவாகியுள்ளது. அதுபோல அதிமுக-பாஜக-பாமக-தேமுதிக அடங்கியக் கூட்டணி உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் திமுக அணியைப் போல அதிமுக அணியில் இன்னும் வெளிப்படையாக எதுவும் அறிவிக்கப்படவில்லை. ஒருப்பக்கம் பாஜக வோடு தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக செய்திகள் வெளியாக மறுபக்கம் அதிமுகவின் சில அமைச்சர்கள் பாஜக வோடுக் கூட்டணி இல்லை என்றும் அவர்களை நாங்கள் தூக்கி சுமக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பாஜக அரசைக் கடுமையாக விமர்சிப்பவரும் மத்திய அமைச்சருமான தம்பிதுரை நேற்று பதிலளித்துள்ளார். அதில் ‘கூட்டணிக் குறித்துக் கட்சித் தலைமை முடிவெடுக்கும். கட்சிக்கு மக்கள் மத்தியிலும் தொண்டர்கள் மத்தியிலும் ஆதரவு உள்ளது. எனவே தலைமை நல்ல நிலைப்பாட்டை எடுக்கும். மத்திய அரசுடன் நட்புடன் இருக்கிறோம். ஆனால் அது வேறு. இன்றுவரையில் அதிமுக எந்தக் கூட்டணியிலும் இல்லை. தனித்துதான் செயல்படுகிறது. கூட்டணி குறித்து தலைமை விரைவில் அறிவிக்கும்’ எனத் தெரிவித்துள்ளார்.

இதனால் பொதுமக்கள் மத்தியிலும் தொண்டர்கள் மத்தியிலும் குழப்பம் உண்டாகியுள்ளது. ஒருப்பக்கம் கட்சியின் முக்கியத் தலைவர்கள் பாஜக வோடுக் கைக்குலுக்கிக் கொண்டும் மற்றொருப் பக்கம் அடுத்த நிலைத் தலைவர்கள் பாஜக வை விமர்சிப்பதும் என அதிமுக இரட்டை நிலைப்பாட்டை எடுத்து வருகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நர்சின் உல்லாச மோகம்: கழற்றிவிட்ட டாக்டர்; கடைசியில் நடந்த களோபரம்