உண்மையான திருநாட்கள் எது? இயக்குனர் தங்கர்பச்சானின் தீபாவளி பதிவு..!
, சனி, 11 நவம்பர் 2023 (15:45 IST)
தீபாவளி திருநாளின் போது அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரை உலக பிரபலங்கள் வாழ்த்துக்களை சொல்வதை வழக்கமாக கொண்டிருக்கும் நிலையில் உண்மையான திருநாட்கள் என்றால் என்ன என்பது குறித்து இயக்குனர் தங்கர்பச்சான் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.
திணிக்கப்பட்ட தீபாவளியையும், தமிழர்களின் பொங்கல் திருநாளையும் வசதி படைத்தவர்கள் மட்டுமே காலம் காலமாக மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர். இவ்வாறு பிள்ளைகளுக்காகவும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்காகவும் படாத பாடுபட்டு பணம் புரட்டி பண்டிகைகளை கடத்தும் ஒவ்வொரு பெற்றோர்களும் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் திருநாளை உண்மையான திருநாட்கள்.
நடைமுறைக்காக ஒவ்வொரு பண்டிகைக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கும் அரசியல் தலைவர்கள் இனிமேலாவது இம்மக்களை நிலையை எண்ணி இது குறித்தும் சிந்திக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்