Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

சித்து விளையாட்டு ஆன்மீகவாதிகளை இறைவன் விரும்புவதில்லை

சித்து விளையாட்டு ஆன்மீகவாதிகளை இறைவன் விரும்புவதில்லை
, வியாழன், 22 மார்ச் 2018 (12:50 IST)
பல்வேறு சித்து விளையாட்டுகளை செய்து மக்களை கவருவதிலேயே பல் ஆன்மீகவதிகள் குறிக்கோளாக உள்ளனர், ஆனால் இறைவன் இதை விரும்புவதில்லை. சித்து விளையாட்டில் ஈடுபாடு உள்ள ஒரு முனிவரின் கதை தான் இது.



பல ஆண்டுகளுக்கு முன் முனிவர் ஒருவர் அடர்ந்த காடு ஒன்றில் ஆசிரமம் அமைத்து வாழ்ந்து வந்தார். மக்கள் அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என்ற நல்ல எண்ணம் கொண்டவர் அந்த முனிவர். கடுமையான தவத்தின் காரணமாக சில சித்து விளையாட்டுகளை கற்றார். அவரின் சித்து விளையாட்டாள் அவரது புகழ் நாடு முழுவதும் பரவியது.

ஒரு நாள் முனிவரைப் பார்க்க வெளிநாட்டிலிருந்து ஓர் இளைஞன் வந்தான். சுவாமி உங்கள் புகழை பற்றி கேள்விப்பட்டே நான் வந்திருக்கிறேன் நீங்கள் மிகப்பெரிய சக்திவாய்ந்தவர் என்றான் அந்த இளைஞன். இதனால் மிகவும் மகிழ்ந்த முனிவர் அந்த இளைஞனுடன் ரொம்ப நேரம் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது ஒரு பெரிய சிங்கம் ஒன்று ஆசிரமத்தை நோக்கி வந்தது. இதனை கண்ட இளைஞன் சுவாமி தங்களால் அந்த பலம் பொருந்திய சிங்கத்தை கொல்ல முடியுமா? என்றான். இதெல்லாம் எனக்கு ஒரு பெரிய விஷயமில்லை என்று சொன்ன முனிவர் கமண்டலத்திலிருந்து கொஞ்சம் தண்ணீரை எடுத்து மந்திரத்தை ஜெபித்து அந்த சிங்கம் இருந்த திசை நோக்கி வீசினார். அந்த வினாடியே அந்த சிங்கம் அங்கேயே விழுந்து இறந்தது.

இதை ஆச்சரியத்துடன் பார்த்த இளைஞன் முனிவரே உங்கள் மந்திர சக்தியைக் கண்டு நான் மிகவும் அதிச்சியடைகிறேன் என்றான். முனிவரும் அதை கர்வத்துடன் ஆமோதித்தார். பின்னர் இளைஞன் சுவாமி இறந்து போன இந்த சிங்கத்தை உங்களால் உயிரோடு வரவைக்க முடியுமா? என மறுபடியும் கேட்டான். சிரித்தவாரே முனிவர் அதுவும் என்னால் முடியும் என்றார். மீண்டும் கமண்டலத்திலிருந்து கொஞ்சம் தண்ணீரை எடுத்து ஜெபித்து சிங்கத்தின் மேல் தெளித்தார். அடுத்த வினாடியே சிங்கம் உயிர் பெற்று எழுந்து ஓடியது.

பின்னர் இளைஞன் அந்த முனிவரைப் பார்த்து முனிவரே, நீங்கள் சிங்கத்தை முதலில் கொன்றீர்கள். பின்னர் அதை உயிர் பிழைக்க வைத்தீர்கள். இதனால் நீங்கள் பெற்ற பலன் என்ன? இதனால் என்ன ஆன்மிக பணியை நீங்கள்செய்தீர்கள்? இந்த சித்து விளையாட்டு இறைவனை நீங்கள் எளிதாகக் காண உங்களுக்கு உதவி புரியுமா? இறைவனின் அருளைப் பெற்ற ஒருவன் விலை மதிப்பில்லாத ஞானம், வைராக்கியம், பக்தி இவற்றை விட்டுவிட்டு சித்து விளையாட்டுகளைச் செய்ய ஆரம்பிப்பது தவறு இல்லையா? இந்த மந்திர தந்திரங்கள் எல்லாம் இறைவனுக்குப் பிடிக்குமா? கடவுளை அடைய இவையெல்லாம் தடை அல்லவா? என்றான்.

இதனை கேட்ட முனிவர் அதிர்ந்துபோய், அந்த இளைஞனை நிமிர்ந்து பார்த்தார். அந்த இளைஞன் அவர் பார்க்கும்போதே மாயமாய் மறைந்தான். ஆம் இளைஞனாய் வந்தவர் கடவுள்தான் கண்ணீருடன் கையெடுத்துக் கும்பிட்ட முனிவர், அன்று முதல் தன் சித்து வேலைகள் அனைத்தையும் விட்டுவிட்டு ஆன்மீகப் பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.

உண்மையான ஆன்மீகப் பணி என்பது சித்து விளையாட்டு மூலம் மக்களை கவருவது அல்ல, இறைவனின் அருளால் மக்களுக்கு நன்னெறிகளை கற்பிப்பதும், சேவை செய்வதுமே ஆகும். இறைவன் நமக்கு கொடுத்த சக்திகளை நாம் வீணாக பயன்படுத்துவதை அவர் ஒருபோதும் விரும்பமாட்டார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விநாயகருக்கு அர்ச்சனைக்குரிய இலைகள்