Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கொடியேற்றத்துடன் தொடங்கியது குலசை தசரா திருவிழா!

Advertiesment
Kulasai Dussehra

Prasanth K

, செவ்வாய், 23 செப்டம்பர் 2025 (12:50 IST)

உலக புகழ்பெற்ற குலசை தசரா திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.

 

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டிணம் முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா விழா உலக புகழ் பெற்றதாகும். பலரும் பல கடவுளர் வேடமிட்டு முத்தாரம்மனை வேண்டி வழிபடுவது இதன் சிறப்புகளில் ஒன்று. 9 நாள் கோலாகலமாக நடைபெறும் தசரா விழாவிற்கான கொடியேற்றம் இன்று நடைபெற்றது.

 

இதில் லட்சக்கணக்கான மக்கள் கலந்துக் கொண்டு கோவிலில் அளித்த மஞ்சள் கயிறை கட்டிக் கொண்டு கடலில் நீராடினர். இன்று முதல் தொடர்ந்து 9 நாட்களுக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், மதியம் 12 மணியளவில் அன்னதானமும் நடைபெறும். 

 

இன்று முதல் அக்டோபர் 1 வரை 9 நாட்களுக்கு தினசரி இரவு 10 மணிக்கு அன்னை முத்தாரம்மன் ஒவ்வொரு வாகனத்திலாக வீதி உலா வரும் நிகழ்வும் நடைபெறும். 10ம் நாளன்று 11 மணிக்கு அன்னை முத்தாரம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகிஷாசூர சம்ஹாரம் நிகழ்ச்சி கடற்கரையில் நடைபெறும்.

 

இதை காண தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் கூடுவார்கள் என்பதால் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்த ராசிக்காரர்கள் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது! - இன்றைய ராசி பலன்கள் (23.09.2025)!