Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ் மாதமான ஆடி 1-ம் தேதியை வரவேற்று கரூரில் தேங்காய் சுட்ட பொதுமக்கள் !!

Webdunia
தமிழ் மாதமான ஆடி 1-ம் தேதியை வரவேற்று கரூரில் தேங்காய் சுட்ட பொதுமக்கள் – காலம், காலமாக நடந்து வரும் சம்பர்தாய நிகழ்ச்சி ஏராளமானோர்  பங்கேற்பு.

கரூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஆடி மாதம் முதல் நாளையொட்டி, தேங்காய் சுடும் பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். அதனடிப்படையில் ஆடி மாதம் ஒன்றாம் தேதியான இன்று மாலை கரூர் மாவட்டத்தின் அமராவதி ஆற்றங்கரையோரமான கரூர் லைட் ஹவுஸ் கார்னர், படிக்கட்டுத்துறை, பெரிய ஆண்டாங்கோயில், சின்ன ஆண்டாங்கோயில், திருமாநிலையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இந்த ஆடி தேங்காய் சுடும் நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது. மேலும், இந்த பண்டிகை கொண்டாடப்படும் நிகழ்ச்சி மகாபாரதக் கதையுடன் தொடர்புடையதாக கூறப்படுகிறது.
 
அதர்மத்துக்கும், தர்மத்துக்கும் இடையிலான மகாபாரத யுத்தம் ஆடி மாதம் 1-ந் தேதி தொடங்கி 18 நாட்கள் நடைபெற்று "ஆடி-18" அன்று முடிவுக்கு வந்தது. இந்த  போரில் தர்மம் வெல்ல வேண்டும் என்று யுத்தம் தொடங்கும் நாளான ஆடி 1-ந் தேதி மக்கள் அனைவரும் வேண்டி அதற்காக விநாயகர் மற்றும் அவரவர் இஷ்ட  தெய்வங்களுக்கு பூஜை செய்கிறார்கள். இந்த பூஜையின்போது படைக்கும் வகையில் இதுபோல் தேங்காய் சுட்டு அதனை பிரசாதமாக படைத்து வழிபட்டதாக ஒரு  ஐதீகம் உள்ளது.
 
ஆண்டாண்டு காலமாக அந்த ஐதீகத்தை கடைபிடிக்கும் வகையில் சேலம் மாவட்டத்தில் ஆடி மாதப் பிறப்பன்று தேங்காய் சுடும் பண்டிகை கொண்டாடப்பட்டு  வருகிறது. 
 
புதிய தேங்காயை எடுத்து அதன் மேல் உள்ள நார்களை அகற்றிவிட்டு ஓடு மெலிதாகும் அளவுக்கு அதை தரையில் தேய்ப்பார்கள். ஒரு குறிப்பிட்ட அளவுக்கு  தேய்க்கப்பட்டதும், அதன் ஒரு கண்ணில் துளையிட்டு உள்ளே இருந்த தேங்காய் தண்ணீர் வெளியேற்றப்படும். 
 
பின்னர் துளையிட்ட கண்ணின் வழியாக தேங்காய்க்குள் பச்சரிசி, பருப்பு, வெல்லம், அவல், எள், ஏலக்காய் ஆகியவை கலந்த கலவையை இட்டு, நீண்ட ஒரு  முனை கூராக சீவப்பட்ட அழிஞ்சிமர குச்சியில் அந்த தேங்காயை சொருகுவார்கள். பின்னர் அந்த குச்சியை சுற்றி மஞ்சளை பூசி துளையை மூடுவர். அதைத்  தொடர்ந்து வீட்டு வாசலில் ஒரு இடத்தில் நெருப்பு மூட்டி, அந்த நெருப்பில் குச்சியில் சொருகப்பட்ட தேங்காயை காட்டி சுடுவர் என்கின்றனர் இப்பகுதி  பொதுமக்கள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கந்த சஷ்டி திருவிழா: தங்க கவசம், வைரவேல் உடன் காட்சியளித்த சுவாமிமலை முருகன்..!

திருச்செந்தூரில் கந்தசஷ்டி: நீண்ட வரிசையில் பக்தர்கள்.. கடற்கரையில் பெருங்கூட்டம்..!

இந்த ராசிக்காரர்களுக்கு தொழிலில் லாபம் உண்டாகும்!– இன்றைய ராசி பலன்கள்(07.11.2024)!

திருச்செந்தூரில் கந்த சஷ்டி: விரதம் இருப்பவர்கள் என்ன செய்ய வேண்டும்?

64 ஆண்டுகளுக்கு பிறகு வரும் குபேர யோகம்! இந்த ராசிக்காரர்களுக்கு செல்வம் குவியும்?

அடுத்த கட்டுரையில்
Show comments