பிரளயத்துக்குப் பிறகு, உலக உயிர்கள் அனைத்தும் ஒரு குடத்தில் இருந்து தோன்றிய தலம் என்பதால் கும்பகோணமே உலக உயிர்களின் பிறப்பிடம் என்று கூறுவர்.
ஒட்டுமொத்த உயிர்களின் பீஜங்களும் பாதுகாக்கப்பட்டு பெரும் ஊழிக்குப் பிறகு இங்கேதான் உடைக்கப்பட்டு மீண்டும் சிருஷ்டி தொடங்கியது என்பது ஐதிகம்.
பிரம்மன் பூஜித்து வந்த அமிர்தக் குடம் சிவனாரின் கணையால் உடைபட்டு அதிலிருந்த அமிர்தம் வழிந்தோடி தேங்கிய இடங்கள் இரண்டு. ஒன்று கும்பேஸ்வரர் கோயிலின் பொற்றாமரைக் குளம். மற்றொன்று மகாமக தீர்த்தக்குளம்.
1. இந்திர தீர்த்தம் - மோட்சம் அளிக்கும்.
2. அக்னி தீர்த்தம் - பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்.
3. யமதீர்த்தம் - மரண பயம் போக்கும்.
4. நிருதி தீர்த்தம் - தீய சக்திகளின் பயங்கள் நீங்கும்.
5. வருண தீர்த்தம் - ஆயுள் விருத்தி உண்டாகும்.
6. வாயு தீர்த்தம் - நோய்கள் அகலும்.
7. குபேர தீர்த்தம் - சகல செல்வங்களும் உண்டாகும்.
8. ஈசான தீர்த்தம் - சிவனடி சேர்க்கும்.
9. பிரம்ம தீர்த்தம் - இறந்த முன்னோரைச் சாந்தப்படுத்தும்.
10. கங்கை தீர்த்தம் - கயிலைப் பதவி அளிக்கும்.
11. யமுனை தீர்த்தம் - பொருள் சேர்க்கை உண்டாகும்.
12. கோதாவரி - தீர்த்தம் - எண்ணியது நடக்கும்.
13. நர்மதை - தீர்த்தம் - உடல் வலிமை உண்டாகும்.
14. சரஸ்வதி - தீர்த்தம் - ஞானம் உண்டாகும்.
15. காவிரி - தீர்த்தம் - புத்தியை மேம்படுத்தும்.
16. குமரி - தீர்த்தம் - ஏழு தலைமுறைக்கும் புண்ணியம் சேர்க்கும்.
17. பயோஷ்னி - தீர்த்தம் - கோலாகலம் அளிக்கும்.
18. சரயு - தீர்த்தம் - மனக் கவலை தீர்க்கும்.
19. அறுபத்தாறு - கோடி தீர்த்தம் - துன்பம் நீங்கி இன்பம் கூடும்.
20. தேவ தீர்த்தம் - சகல பாவங்களும் போக்கி, தேவேந்திர பதவி தரும்.