2025 New Year Horoscope: இந்த 2025 புது வருடத்தை சிறப்பாக தொடங்க ஒவ்வொரு ராசிக்காரர்களும் அவர்கள் ராசி, நட்சத்திரத்திற்கு உகந்த தெய்வங்களை வழிபட்டு முறையான விரதத்தை அனுசரிப்பதன் மூலம் சகல நன்மைகளையும் பெற முடியும். ஒவ்வொரு ராசியினருக்கும் உகந்த தெய்வ வழிபாடுகள் குறித்து பார்ப்போம்.
மேஷம், சிம்மம், மகரம், கும்பம், விருச்சிகம்: செவ்வாயை ராசியாபதியாக கொண்ட மேஷம், சூரியனை ராசியாபதியாக கொண்ட சிம்மம், சனியை ராசியாபதியாக கொண்ட மகரம், செவ்வாயை ராசியாபதியாக கொண்ட விருச்சிகம், கும்பம் உள்ளிட்ட 5 ராசியினருக்கு சிவன் உகந்த ராசி தெய்வமாவார். சிவ வழிபாடு மேஷ ராசியினருக்கு நன்மை அருளக் கூடியது. உடன் முருக வழிபாடும் சால சிறந்தது. மலை மீதுள்ள சிவன் கோவில்கள் வழிபாட்டிற்கு சிறப்பு வாய்ந்தது. மேஷ ராசியில் அமைந்த அஸ்வினி, பரணி மற்றும் கார்த்திகை (முதல் பாதம்) நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிரதோஷ நாட்களில் சிவன் கோவில்களில் வழிபாடு செய்யலாம்.
வீட்டில் விரதம் இருந்து சிவபெருமானை பூஜித்து திருவாசகம் உள்ளிட்ட பதிகங்களை பாடுவது வீட்டில் சிவபெருமானின் பூரண அருளை அள்ளித்தரும்
ரிஷபம், துலாம்: சுக்கிரனை ராசியாபதியாக கொண்ட ரிஷபம், துலாம் ராசியினருக்கு லெட்சுமி தேவி வழிபாடு கீர்த்தி தரும். லெட்சுமி தேவி 8 ரூபங்களில் அஷ்ட லெட்சுமிகளாக விளங்குபவர். கஜ லெட்சுமி, ஆதி லெட்சுமி, தானிய லெட்சுமி, தன லெட்சுமி, சந்தான லெட்சுமி என 8 லெட்சுமியரையும் வணங்குவதால் அஷ்ட பலன்களையும் அடைய முடியும்.
லெட்சுமி வழிபாட்டால் வீட்டில் செல்வமும், வளமும் சேரும். தீபாவளிஐ அடுத்து மூன்றாவது நாளில் வரும் அமாவசை திதியில் லட்சுமி பூஜை செய்வது ஐதீகம். இந்நாளில் லெட்சுமி தேவியை மனமுருகி வேண்டி விரதமிருந்து அனுஷ்டானங்களை கடைபிடிக்க வேண்டும்.
வெள்ளிக்கிழமைகளில் லெட்சுமி தேவியை மனமுருக வேண்டி காயத்ரி மந்திரத்தை கூறி வழிபடுவது சகல சௌபாக்கியங்களையும் அருளும்.
தனுசு, மீனம்: குருவை ராசியாபதியாக கொண்ட தனுசு மற்றும் மீன ராசியினருக்கு ஸ்ரீ தட்சிணாமூர்த்தி வழிபாடு தெய்வமாவார். முக்கண் தெய்வமான சிவபெருமானின் கீர்த்தி மிகு 64 சிவ திருமேனிகளுள் ஒன்றாக வணங்கப்படும் திருமேனி தட்சிணாமூர்த்தி. தஷண என்னும் ஞானத்தை போதிப்பவர் தட்சிணாமூர்த்தி. தட்சிணாமூர்த்தி வழிபாடு குருவின் பார்வையை உங்கள் மீது அதிகரித்து பல நன்மைகளை அருளும்.
குருவின் நாளான வியாழக்கிழமையே தட்சிணாமூர்த்தி வழிபாட்டிற்கு சிறப்பு மிகுந்த நாளாகும். இந்நாளில் கீழ்கண்ட தட்சிணாமூர்த்தி மந்திரத்தை உச்சரித்து வழிபடுவதன் மூலம் பல நன்மைகளை அடையலாம்
ஓம் நமோ பகவதே தட்சிணாமூர்த்தயே
மஹ்யம் மேதாம் பிரக்ஞாம் ப்ரயச்ச நமஹ;
கடகம்: சந்திரனை ராசியாபதியாக கொண்ட ராசி கடகம். இந்த ராசிக்காரர்களுக்கு அம்மன் வழிபாடு மகிமைகள் தருவது. வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவில்களில் குங்குமார்ச்சனை செய்வது வீட்டிலிருந்து தீமைகளை நீக்கும். ஆடி வெள்ளிக்கிழமைகளில் வீட்டை சுத்தம் செய்து முறையான விரதத்தை கடைபிடிப்பது சகல நன்மைகளையும் அருளும்.
மிதுனம், கன்னி: புதனை ராசியாபதியாக கொண்ட மிதுன ராசிக்காரர்களுக்கும், புதனை ராசியாபதியாக கொண்ட கன்னி ராசியினருக்கும் அருள் தரும் தெய்வம் ஸ்ரீமன் நாராயணன். பாற்கடலில் பள்ளிக் கொண்டுள்ள ஸ்ரீமன் நாராயணன் சயன நிலையில் காக்கும் கடவுளாக பூமியை காக்கிறார்.
ஸ்ரீமன் நாராயணரையும் அவரது நவ அவதாரங்களையும் வணங்குவது நன்மை தரும். வாழ்வில் வளத்தையும், மகிழ்ச்சியையும் கொண்டு வர வீட்டில் சத்யநாராயண பூஜை செய்வது இந்த ஆண்டில் உங்களுக்கு பல சௌபாக்கியங்களை வழங்கும்.
சனிக்கிழமை திருமாலுக்கு உரிய நாள் என்பதால் இந்நாளில் நாராயணரை மனமுருகி வழிபடுவது ஐஸ்வர்யத்தை தரும். புதன் கிழமைகளில் திருமாலின் அவதாரமான நரசிம்மரை வழிபடலாம்