கிரகநிலை:
ராசியில் கேது - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூரியன், புதன் - தைரிய வீர்ய ஸ்தானத்தில் சுக்கிரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி (வ) - களத்திர ஸ்தானத்தில் ராஹூ - பாக்கிய ஸ்தானத்தில் குரு(வ) - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகநிலை உள்ளது.
கிரகமாற்றம்:
ஐப்பசி 06 (23.10.2024) அன்று தொழில் ஸ்தானத்தில் இருந்து செவ்வாய் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
ஐப்பசி 08 (25.10.2024) அன்று தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து புதன் தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
ஐப்பசி 18 (05.11.2024) அன்று ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி வக்ரம் நிவர்த்தி ஆகிறார்.
ஐப்பசி 22 (08.11.2024) அன்று தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக்கிரன் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
ஐப்பசி 27 (13.11.2024) அன்று தைரிய வீரிய ஸ்தானத்தில் புதன் வக்ரம் ஆரம்பிக்கிறார்.
பலன்:
இந்த மாதம் ராசிநாதன் புதன் தனவாக்கு ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். பணவரத்து அதிகரிக்கும். சூரியனின் சஞ்சாரம் மன குழப்பத்தை உண்டாக்கலாம். எதையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செய்வது நல்லது. காரிய தடைகள் விலகும். புதன் சஞ்சாரம் பயணங்கள் மூலம் நன்மையை தரும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். தொலைதூரத்தில் இருந்து வரும் தகவல்கள் நல்லதாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த தொய்வு நிலை மாறி முன்னேற்றம் உண்டாகும். லாபம் அதிகரிக்கும். திறமையான பணியாளர்கள் அமைவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு சாதகமான பலன் காண்பார்கள். குடும்பத்தில் இதமான சூழ்நிலை நிலவும்.
உங்களது கருத்துக்களுக்கு மாற்று கருத்துக்கள் இருக்காது. கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். குழந்தைகளின் செயல்பாடுகள் மன திருப்தியை தரும். வேடிக்கை வினோதங்களை கண்டு களிக்கும் சூழ்நிலை ஏற்படலாம். பெண்களுக்கு தொலைதூர தகவல்கள் மன மகிழ்ச்சியை தருவதாக இருக்கும். கலைத்துறையினருக்கு திறமை வெளிப்படும். அரசியல்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்கள் சாதகமாக முடியும்.
உத்திரம்:
இந்த மாதம் குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் கூடும். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். குடும்பத்தாருடன் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நேரலாம். உறவினர்கள் மத்தியில் மதிப்பும் மரியாதையும் கூடும்.
ஹஸ்தம்:
இந்த மாதம் முன் கோபத்தை குறைத்து நிதானத்தை கடைபிடிப்பது பிரச்சனைகள் வராமல் தடுக்கும். பணவரத்து திருப்தி தரும். மாணவர்கள் மிகவும் கவனத்துடன் பாடங்களை படிப்பது கூடுதல் மதிப்பெண் உதவும். எதையும் சமாளிக்கும் திறமை ஏற்படும்.
சித்திரை:
இந்த மாதம் மனகுழப்பம் தீரும். எதிலும் பயம் உண்டாகும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தடை தாமதம் ஏற்படும். சங்கடமான சூழ்நிலையை சந்திக்க வேண்டி இருக்கும். ஜீரணகோளாறு போன்ற ஏதாவது ஆரோக்கிய குறைவு ஏற்படலாம். செலவுகள் அதிகரிக்கும்.
பரிகாரம்: புதன் கிழமைகளில் சீனிவாசப் பெருமாளுக்கு நெய்தீபம் ஏற்றி வழிபடுங்கள்.
அதிர்ஷ்டகிழமைகள்: புதன், வியாழன்
சந்திராஷ்டம தினங்கள் : அக் 18, 19, நவ 14, 15
அதிர்ஷ்ட தினங்கள்: அக் 24, 25, 26