Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாளக்கிராமம் பூஜை அறையில் வைத்து வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள் !!

Webdunia
சாளக்கிராமம் வைத்து வழிபடுகின்ற வீட்டில் சகல தெய்வ சக்திகளும் அருள் செய்வதாக ஆசார்யர்கள் கூறுகின்றனர். சாளக்கிராமத்தை ஒரு நாளில் இருமுறை  வழிபட வேண்டும். 

சாளக்கிராமம் பூஜை அறையில் வைத்து வழிபட வேண்டியது. அழகுக்காக ஷோ கேஸில் வைக்கக் கூடியது அல்ல. பூஜை அறையில் வைத்து தினமும் பாலாபிஷேகம், ஜலாபிஷேகம் செய்து வழிபட வேண்டும். 
 
வலம்புரி சங்கை போல் பலமடங்கு மிகவும் அரிய பலன்களை தரக் கூடியது இந்த சாளக்கிராமம். ஆனால், பூஜை அறையில் வைத்து வழிபடுவதாக இருந்தால், தினமும் நிச்சயமாக ஸ்நான சங்கல்பம் முடித்து, தூய்மையான கங்கை நீரினால் சாளக்கிராமத்தை அபிஷேகம் செய்ய வேண்டும். 
 
உங்களால் அபிஷேகம் செய்ய முடியாத நாட்களில், உங்கள் குழந்தைகளை அபிஷேகம் செய்ய பழக்கப்படுத்துங்கள். நிச்சயம் உங்கள் வம்சத்துக்கே நல்ல பலன்கள்  கிடைக்கும். 
 
சாளக்கிராம பூஜை செய்பவன் உள்ளம் தூய்மையாகும். மஹா லஷ்மி கடாஷம் வீட்டில் குடிகொள்ளும். சாளக்கிராமத்தை நினைத்தாலும், தரிசித்தாலும், பூஜை செய்தாலும், சிங்கத்தை கண்டு மற்ற மிருகங்கள் தெறித்து ஓடுவது போல பூஜை செய்பவர்களின் பாவங்கள் கழன்று ஓடும். 
 
சாளக்கிராமத்தை பக்தியுடனோ அல்லது  பக்தியே இல்லாது அல்லது எதிர்பாராமல் திடீரென பூஜை செய்ய நேர்ந்தாலும் முக்தி உண்டு. சாளக்கிராம பூஜை செய்பவர்களுக்கு எம பயம் ஏற்படாது. 
 
பன்னிரெண்டு சாளக்கிராமம் கொண்டு பூஜை செய்தால் பன்னிரெண்டு கோடி சிவலிங்கங்களை பன்னிரெண்டு கல்ப காலம் பூஜை செய்த பலன்கள் ஒரே நாளில்  கிடைக்கும் என்கின்றன சாஸ்திரங்கள்.
 
சாளக்கிராமத்தில் தெய்வீக அருள் இருப்பது மட்டுமில்லாமல் இவற்றில் 14 உலோக சக்திகள் இருப்பதாக கூறப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments