துலாம் ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் ஐப்பசி மாதம் பிறந்துள்ளது. இந்த மாதத்தில் தீபாவளி பண்டிகை, கந்த சஷ்டி, ஐப்பசி பவுர்ணமி அன்னாபிஷேகம், இந்திர ஏகாதசி, பிரபோதினி ஏகாதசி உள்ளிட்ட பல்வேறு பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன.
ஐப்பசி மாதம் ஐஸ்வர்யங்களை அள்ளித்தரும் மாதமாகும். ஐப்பசி மாதம் ஐஸ்வர்யங்களை அள்ளித்தரும் மாதமாகும். இம்மாதத்திற்கு துலா மாதம் என்ற பெயரும் உண்டு.
கார்த்திகை விரதம் என்பது முருகப்பெருமானை மனதில் எண்ணி விரதம் மேற்கொண்டு கடைபிடிக்கப்படும் வழிபாட்டு முறையாகும்.
ஐப்பசி மாதம் கார்த்திகை தினத்தன்று விரதமிருப்பவர்கள் அன்றைய தினத்தில் அன்னதானம் செய்தால் புண்ணிய பலன்கள் கிடைக்கும்.
மேலும் முருகனின் அருளால் நோய்கள் மற்றும் துஷ்ட சக்திகளின் பாதிப்புகள் நீங்கும். அதுமட்டுமல்லாமல் நன்மக்கட்பேறு, செழிப்பான பொருளாதார நிலை, நீண்ட ஆயுள் ஏற்படும்.
கார்த்திகை பெண்கள் ஸ்கந்தனைப் பாலூட்டி வளர்த்த காரணத்தால் அவர்கள் 6 பேரும் ஸ்கந்தனுக்கு தாய் என்ற சிறப்பினைப் பெற்றனர்.
அப்போது சிவபெருமான் கிருத்திகை பெண்களே நீங்கள் எம் குமாரனை பாலூட்டி வளர்த்த காரணத்தால் இன்று முதல் உங்கள் பெயரிலேயே முருகன் கார்த்திகேயன் என்ற பெயர் பெறுவான்.
அது மட்டுமல்ல உங்களின் நாளாகிய கிருத்திகை நட்சத்திரத்தன்று விரதமிருந்து முருகனை வழிபடுவோர் இன்னல்கள் அனைத்தும் நீங்கி வாழ்வில் சகல செல்வங்களும் பெற்று வாழ்வார்கள் என்று கூறி ஆசிர்வதித்தார். அவ்வாறே இன்றும் முருக பக்தர்கள் யாவரும் கிருத்திகை விரதம் இருந்து முருகனின் பேரருளைப் பெற்று வருகிறார்கள்.