Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேய்பிறை அஷ்டமியில் பஞ்சதீபம் ஏற்றி வழிபாடு செய்வதால் உண்டாகும் பலன்கள் !!

Webdunia
செவ்வாய், 25 ஜனவரி 2022 (14:32 IST)
ஸ்ரீ பைரவருக்குப் பவுர்ணமிக்கு பின்வரும் தேய்பிறை அஷ்டமியில் பஞ்சதீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்கமுடியாத தொல்லைகள் நீங்கும், நல்லருள் கிட்டும்.


இலுப்பை எண்ணெய், விளக்கு எண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், பசுநெய் இவற்றினை தனித்தனி தீபமாக அகல் விளக்கில் ஏற்றலாம்.

ஓன்றிலிருந்து ஒன்றை ஏற்றாமல் தனித் தனி தீபமாக ஏற்றி வழிபட்டால் எண்ணிய காரியங்கள் நிறைவேறும் என்பது ஐதீகம். ஆறு தேய்பிறை அஷ்டமிகளில் பைரவரை சிவப்பு நிற அரலியால் வழிபட்டால் நல்ல மக்கள் செல்வங்களைப் பெறலாம்.

காலபைரவரை ஒவ்வொரு அஷ்டமியிலும் வணங்கி வழிபடுவது ரொம்பவே விசேஷம். பைரவ வழிபாடு செய்வதும் பைரவாஷ்டகம் சொல்லி வணங்குவதும் பலன்களைத் தந்தருளும். பைரவருக்கு வடைமாலை சார்த்தி வேண்டிக்கொள்ளலாம்.
 
தெருநாய்களுக்கு உணவளிப்பதும் பிஸ்கட் வழங்குவதும் எதிர்ப்புகளையெல்லாம் தவிடுபொடியாக்கும். துஷ்ட சக்திகள் நம்மை நெருங்கவிடாமல் பைரவர் காத்தருள்வார்.
 
பைரவ வழிபாடு என்பது மிக மிக வலிமையான வழிபாடுகளில் ஒன்று. கலியுகத்துக்கு காலபைரவர் என்றொரு சொல் உண்டு. பைரவரை அஷ்டமியில் வழிபடுவார்கள் பக்தர்கள். குறிப்பாக, தேய்பிறை அஷ்டமியில் பைரவ வழிபாடு செய்வது கூடுதல் பலன்களைத் தந்தருளும் என்பது ஐதீகம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments