தமிழ்க்கடவுளான முருகப் பெருமான் செவ்வாய்க்குரியவர். இவரை வணங்கி துவங்கும் செயல்கள் வெற்றியடையும் என்பது நம்பிக்கை.
செவ்வாயையும், முருகப்பெருமானையும், பூமாதேவியையும் வழிபட்டு செவ்வாயில் மங்கலப் பொருள் வாங்கினால் பன்மடங்கு பெருகுவதோடு, எல்லாச் சிறப்புகளும் நம்மைத் தேடி வரும்.
நவக்கிரகங்களில் ஒருவரான செவ்வாய்க்கு 'மங்களன்' என்றும் பெயருண்டு. செவ்வாயன்று முருகனை வழிபட்டால் சகோதர ஒற்றுமையும், திருமணத்தடையும் நீங்கும்.
வீரத்தின் நாயகன் செவ்வாய்க்கு உகந்த நாள் செவ்வாய்க்கிழமை. புனிதமான இந்த கிழமையைத் தான் பலரும் விரதமிருக்க தேர்ந்தெடுப்பது. முருகனுக்கும், அம்மனுக்கும் உகந்த கிழமை செவ்வாய்.
தமிழ்நாட்டில் செவ்வாய் கிழமையில் சுப நிகழ்ச்சிகள் நடத்துவதில்லை, பொருட்கள் வாங்குவதில்லை என்று வழக்கம் இருக்கிறது. உண்மையில் இந்தக் கிழமை மங்களகரமானது, சிறப்புக்குரியது.
செவ்வாய்க்கு மங்களன், பூமிகாரகன் என்று பெயர் உண்டு. பெயரிலேயே மங்களம் இருப்பதால், அந்நாளில் தொடங்கும் செயல் சுபமாக நிறைவேறும். ஒருவர் வீடு கட்ட வேண்டுமென்றால் செவ்வாய் கிரகத்தின் அனுகூலம் இருக்கவேண்டும்.