Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பைரவரை வழிபடுவதன் மூலம் கிடைக்கும் பலன்கள் !!

Webdunia
வியாழன், 24 பிப்ரவரி 2022 (09:20 IST)
பயம் போக்கும் பைரவர் வழிபாடு துன்பம் ஒரு வெள்ளம் போல சூழ்ந்துகொண்டு தப்ப வழியின்றித் தவிப்பவர்கள், பற்றிக் கொள்ள உகந்த வழிபாடு பைரவர் வழிபாடு.


பைரவர் காவல் தெய்வம் போன்றவர். கூப்பிட்ட குரலுக்கு ஓடிவந்து காப்பவர். இவர், நவகிரகங்களில் சனியின் குருவாக கருதப்படுபவர். குருவை வணங்கினால் சீடன் மகிழ்வார் என்பது இயல்பு.

பைரவரை வழிபடுவதன் மூலம் சனியினைக் குளிர்வித்து அவர் பார்வையால் ஏற்படும் கெடுபலன்களை நற்பலன்களாக மாற்றிவிட முடியும். அசுர சக்திகளை அழிப்பதற்காகவே அவதரித்த பைரவரை வேண்டிக்கொள்ள பக்தர்களைத் தாக்கும் தீய சக்திகளை அவர் அழித்துக்காப்பார்.

சிவாலயங்களில் அனைத்து வழிபாடுகளும் காலை சூரியபகவானிடம் தொடங்கி இரவில் பைரவரிடம்தான் நிறைவு பெறும். இரவில் கோயிலைக் காத்தருள்பவர் பைரவர் என்பதால் அவரின் திருவடிகளில் திறவுகோலை சமர்ப்பிக்கும் வழக்கமும் உண்டு.

ஆலயத்தைக் காக்கும் பைரவர் அடியார்களின் வீட்டையும் காப்பார். தினமும் ஆலயம் சென்று பைரவரை வணங்கி வர திருடர் பயம் நீங்கி ஆனந்தமாக வாழலாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments