வலம்புரி சங்கு சுலபமாக கிடைக்காது. அந்த வலம்புரி சங்கினை வைத்து வழிபட்டால் எந்த அளவிற்கு பலன் உள்ளதோ அதே பலனானது இந்த கோமதி சக்கரத்தை வைத்து வழிபடுவதன் மூலமும் நாம் பெறலாம்.
புதியதாக இந்த கோமதி சக்கரத்தை வாங்கி இருந்தால் முதலில் அதை காய்ச்சாத பசும்பாலில் அபிஷேகம் செய்ய வேண்டும். பின்பு தூய்மையான நீரில் கழுவி நன்றாக துடைத்து மஞ்சள் குங்குமம் வைத்து ஒரு செம்பு தட்டில் சிகப்பு வண்ண துணியின் மீது கோமதி சக்கரத்தை பிரதிஷ்டை செய்து, பூ வைத்து மகாலட்சுமியின் திருவுருவப் படத்திற்கு முன்பாகவோ அல்லது பெருமாளின் திருவுருவப் படத்திற்கு முன்பாக உங்கள் பூஜை அறையில் வைத்துக் கொள்ளலாம்.
கோமதி சக்கரத்தை நம் வீட்டில் வைத்து வழிபட்டால் பல புண்ணிய ஸ்தலத்திற்கு சென்று வழிபட்ட பலனை நம் வீட்டிலேயே பெறலாம்.
நாகதோஷம் உள்ளவர்கள் இந்த கோமதி சக்கரத்தை வீட்டில் வைத்து வழிபட்டு வந்தால், அந்த தோஷமானது சில நாட்களில் தானாகவே விலகிவிடும். நாக தோஷத்திற்கு சிறப்பாக எந்த பரிகாரமும் செய்ய வேண்டாம்.
கோமதி சக்கரம் உள்ளவர்களது வீடு மிகவும் சந்தோஷமாக இருக்கும் வீட்டில் உள்ளவர்களது கோபம் தானாகவே குறைவதால் பிரச்சினைகள் ஏதும் வராது. உங்களது வீட்டில் வாஸ்துவினால் ஏதாவது ஒரு பிரச்சனை ஏற்பட்டாலும் அந்த தோஷங்களை இந்த கோமதி சக்கரமானது நீக்கிவிடும்.
சிறிய வடிவத்தில் உள்ள 7 கோமதி சக்கரத்தை ஒரு சிவப்புத் துணியில் கட்டி வீட்டு வாசலில் தொங்க விட்டால் எதிர்மறை ஆற்றலானது நம் வீட்டிற்குள் நுழையாது.