நவகிரகங்களை வழிபடுவதற்கென்று சில விதிமுறைகள் இருக்கின்றன. நவகிரகங்கள் இருக்கும் திசையை நோக்கி வழிபட வேண்டும் என்கின்றனர் ஜோதிட வல்லுநர்கள்.
சூரியனை வழிபட்டால் வாழ்வில் மங்களமும் ஆரோக்கியமும் கிடைக்கும்.
சந்திரனை வணங்கினால் புகழ் கிடைக்கும்.
செவ்வாயை வழிபடுவதால் நம்முடைய தைரியம் அதிகரிக்கும்.
புதனை வழிபட்டால் நல்ல புத்தியும், அறிவாற்றலும் அதிகமாகும்.
குரு பகவானை வணங்கினால் செல்வ செழிப்பும், குழந்தை பாக்கியமும் கிடைக்கும்.
சுக்கிரனை வணங்கினால் நல்ல மனைவி, வீடு, மனை அமையும் யோகம் உண்டாகும்.
சனிபகவானை வழிபட்டால் ஆயுள் பலம் பெறும்.
ராகுவை வணங்கினால் பயணத்தில் நன்மை கிடைக்கும்.
கேதுவை வணங்கினால் ஞானம் பெருகும். மோட்சம் கிடைக்கும். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும்.
அந்தந்த கிழமைக்கு ஏற்றவாறு அந்தந்த கிரகங்களை வழிபடும் போது நமக்கு ஏற்படும் பலன்கள் கூடுதலாக கிடைக்கும்.