மணிபூரகம் - மேல் வயிறு முழுதும், பித்தம், கணையம், இரைப்பை, சிறுநீரகம், வயிற்றின் அனைத்து உள்ளுறுப்புகள்
அனாகதம் - வயிற்றின் மேல்புறம் முதல் இதயம், மூச்சுப்பை
விசுத்தி - மூச்சுக்குழல், தொண்டை முழுவதும்
ஆக்ஞை - கண், மூக்கு இரண்டின் நடுப்புறம், கீழ் மேல்புறம் பிடரிக்கு நேர் பின்புறம் , நடுமூக்கின் வழி புருவ மத்தி வழி. நெற்றி (நடு, மேல்) பிராணாயாமம் (யோகம்) என்பது பாரதத்தின் கிடைத்ததற்கரிய சொத்து. இங்கிருந்தே இக்கலை உலகம் முழுவதும் பரவியுள்ளது.
நாமே இறைவன் என்பதை கடுந்தவம் மூலம் உலகிற்கு உணர்த்தியது மட்டுமல்லாமல், வாழ்ந்து காட்டியும் தாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெற வேண்டும் என்ற எல்லையற்ற பெருங்கருணையால் மனித குலத்தை மேம்படுத்தவும் மனிதத்தின் மூலம் அனைத்து உயிரிகளையும் நேசித்து அவைகளையும் உயர்த்த வழி கூறிய மஹா சித்த புருஷர்கள் வாழ்ந்த ஞான பூமி இது.
இந்த யோகக்கலை (யோக விஞ்ஞானம்)யை விண்ணவரும் மண்ணவரும் கற்றுத் தேர்ந்து இறைவனோடு இணையும் வித்தையை நமக்கு அளித்த மஹா புருஷர் ஞான சிம்மம்மஹரிஷி ஸ்ரீ பதஞ்சலியாவர். அவர் ஒரு அவதார புருஷராகவும், வேத புருஷராகவும்,சித்த புருஷராகவும் விளங்குபவர்.