Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

பஞ்சபூத கோயில்களில் ஆகாயத்தை குறிக்கும் சிதம்பர நடராஜர் ஆலயம்

பஞ்சபூத கோயில்களில் ஆகாயத்தை குறிக்கும் சிதம்பர நடராஜர் ஆலயம்
பஞ்சபூதங்களாக விளங்குபவன் இறைவன். அதில் ஆகாய ரூபமாக திகழ்கிற தலம் தான் சிதம்பரம். இங்கே உருவம், அருவம், அருவுருவம் என்று மூன்று நிலைகளில் சிவப்பரம்பொருள் காட்சி கொடுக்கிறார். இத்தலம் திருநீலகண்ட நாயனார் அவதாரத் தலம் எனவும் கூறப்படுகின்றது.
இத்தலத்தின் கூடுதல் சிறப்பு. அதாவது ஆனந்தத் தாண்டவக் கோலத்தில், ஆனந்த நடராஜராகவும், சிவகாமி அம்மையாகவும் காட்சி தருவது உருவநிலை. சிவலிங்க ரூபத்தில் திருமூலராகவும், ஸ்ரீசக்ரமாக உமையபார்வதியும் காட்சி தருவது அருவுருவ நிலை. அடுத்து அருவமாக தரிசனம் தருவது தான் சிதம்பர ரகசிய ஸ்தானம். பொற்சபையில் ஆடல்வல்லாரின் வலப்பக்க சுவற்றில் சக்கரம் இருக்கும் இடம் தான் இது. இதை திருவம்பலச் சக்கரம், அன்னாகர்ஷண சக்கரம் என்றும் கூறலாம். சுதர்சன சக்கரத்தில் செல்வம் கொழிக்கும் தலமாக திருப்பதி விளங்குவது போல் அன்னாகர்ஷண சக்கரத்தால் அன்னத்தில்  செழிக்கிறது சிதம்பரம். அந்தக் காலத்தில் அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம் என்று போற்றப்பட்ட தலம் இது.

webdunia
நான்கு வேதங்களோட விழுப்பொருள், அண்ட சராசரங்களோட முழுமுதற்பொருள் ஆகியவற்றைக் குறிக்கிறது தான் அருவ நிலை. அதனால் தான் இந்தத் தலத்துக்கு சிதம்பரம் என்ற பெயர் அமைந்தது. (சித்-அறிவு; அம்பரம்-வெட்டவெளி(ஆகாசம்)). அதனால் தான் பரந்து விரிந்த ஆகாய தலமாகப் போற்றப்படுகிறது. இங்கே நம் கண்ணுக்குப் புலப்படும் நிலையில் தங்க வில்வ மாலைகள் சார்த்தப்பட்டிருக்கும். உலகப் பற்று, அறியாமை  ஆகியவற்றுடன் வாழ்கிறவன், அவற்றிலிருந்து விலகி மெய்ப்பொருளை உணரும் நிலையைப் பெற, மூடிய திரையினுள்ளே இருக்கிற சிவப்பரம்பொருள்  அருள்பாலிப்பதாக ஐதீகம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வளர்பிறை மற்றும் தேய்பிறை உண்டாவதற்கான காரணம்; புராணக்கதை