குருவுக்கு உரிய தேதிகள், கிழமைகள், நட்சத்திரத்தில் பிறப்பவர்களுக்கு பல யோகங்கள் உண்டாகும்.
குருபகவானுக்கு உகந்த நிறம் மஞ்சள், பிடித்த தானியம் கொண்டைக்கடலை, உரிய ரத்தினம் புஷ்பராகம். குருவிற்கு ஏற்ற நாள் வியாழக்கிழமையாகும்.
அந்த நாளில் விரதம் இருந்து மாலையில் சிவன் கோயிலுக்கு செல்லலாம். அங்கு தட்சிணாமூர்த்திக்கு நடக்கும் சிறப்பு பிரார்த்தனையில் கலந்துகொண்டு பக்தர்களுக்கும் ஏழைகளுக்கும் கொண்டைக்கடலை சுண்டல் வழங்கலாம்.
ஒருவரது ஜாதகத்தில் குரு பகவான் எந்த இடத்தில் இருந்தால் என்ன பலன் என்பதைப் பார்ப்போம்.
குரு பகவான் 1-ம் இடத்தில் இருந்தால் நீண்ட ஆயுள், நிறைந்த செல்வம் கிடைக்கும்.
குரு பகவான் 2-ல் இருந்தால் பேச்சாற்றல், அரசு வேலை கிடைக்கும்.
குரு பகவான் 3-ல் இருந்தால் சகோதர அனுகூலம் உடன் பிறப்புகளால் உதவிக் கிடைக்கும்.
குரு பகவான் 4-ல் இருந்தால் தாய் அனுகூலம், வீடு வாகன யோகம் கிடைக்கும்.
குரு பகவான் 5-ல் இருந்தால் புத்திர தோஷம், பெண் குழந்தைகள் தோஷம் நீங்கும்.
குரு பகவான் 6-ல் இருந்தால் போராட்டமில்லாத வாழ்வு மலரும்.
குரு பகவான் 7-ல் இருந்தால் நல்ல வாழ்க்கைத் துணை அமையும்.
குரு பகவான் 8-ல் இருந்தால் நீண்ட ஆயுள் உண்டு.
குரு பகவான் 9-ல் இருந்தால் அள்ளிக் கொடுப்பார்.
குரு பகவான் 10-ல் வந்தால் பதவி மாற்றம் உறுதியாகும்.
குரு பகவான் 11-ல் இருந்தால் செல்வாக்கு, செல்வ நிலையில் உயர்வு உண்டு.
குரு பகவான் 12-ல் இருந்தால் சுபவிரயம், மங்கள ஓசை, பயணங்கள், பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும்.