Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

நாம் வீட்டில் விளக்கேற்றுவதற்கான முக்கிய காரணம் என்ன தெரியுமா...?

நாம் வீட்டில் விளக்கேற்றுவதற்கான முக்கிய காரணம் என்ன தெரியுமா...?
விளக்கின் சுடருக்கு தன்னை சுற்றி உள்ள நெகட்டிவ் எனர்ஜியை ஈர்க்கும் சக்தி உண்டு. அவ்வாறு ஈர்க்கும் போது, நம்மை சுற்றி பாசிட்டிவ் எனர்ஜி அதிகரிக்கும். நம் சுற்று புறம் தெளிவாகவும் பலத்தோடும் காணப்படும். 

வீட்டில் இரண்டு நாள் விளக்கேற்றாமல் இருந்தாலே அது புரியும். ஏதோ வீடே மாயணம் போல் தோன்றும் எல்லாருமே சோர்வாய் இருப்பார்கள். இதுவே விளகேற்றுவதன் தத்துவம் ஆகும்.
 
நம் உடலில் இருக்கும் ஏழு சக்கரங்களில் மூலாதாரமும் ஸ்வாதிஷ்டானமும் நல்லெண்ணெய் விளக்கு ஏற்றுவதால் தூய்மையடைகிறது. அதே போல் மணிபூரகம்,  அனாஹதம் இரண்டும் நெய்விளக்கு ஏற்ற, தூய்மையடைந்து நற்பலனை அடைகின்றன. நம் உடலில் இருக்கும் நாடிகளில் சூரிய நாடி, சந்திர நாடி, சுஷம்னா நாடி  ஆகியவை மிக முக்கியமாகக் கருதப்படுகின்றன. 
 
சூரிய நாடி, நல்ல சக்தியையும் வெப்பத்தையும் தருகிறது. சந்திர நாடி, குளுமையைத் தருகிறது. சுஷம்னா நாடி, அந்தப் பரம்பொருளுடன் சம்பந்தப்பட்டு, ஆன்மீகப்  பாதையை வகுக்கிறது.
 
நல்லெண்ணெய் விளக்கு ஏற்ற சூரிய நாடி, சுறுசுறுப்பு அடைகிறது. நெய்விளக்கு, சுஷம்னா நாடியைத் தூண்டிவிட உதவுகிறது. பொதுவாகவே நெய் தீபம், சகலவித சுகங்களையும் வீட்டிற்கு நலனையும் தருகிறது. திருவிளக்கை எப்போது வேண்டுமானாலும் ஏற்றலாம். இதற்கு தடையேதும் இல்லை. ஆனால், பொதுவாக மாலை  6.00 மணிக்கு மேல் ஏற்றுவதே நமது மரபு. இதை கருக்கல் நேரம் என்பர். 
 
சூரியன் மறைந்ததும் சில விஷ சக்திகள் சுற்றுச்சூழலில் பரவி வீட்டிற்குள்ளும் வர வாய்ப்பிருக்கிறது. ஒளியின் முன் அந்த விஷ சக்திகள் அடிபட்டு போகும். எனவே அந்நேரத்தில் விளக்கேற்றுகிறோம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தேங்காய் தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் நன்மைகள் !!