Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Sunday, 18 May 2025
webdunia

விளக்கு ஏற்றும்போது கடைபிடிக்கவேண்டிய முறைகள் என்ன தெரியுமா...?

Advertiesment
விளக்கு
கோவில்களில் விளக்கினை ஏற்றினாலும், நம் வீட்டில் விளக்கினை ஏற்றினாலும், இரண்டு கால்களையும் மடக்கி சம்மணம் இட்டு தான் விளக்கு ஏற்ற வேண்டும். 

சில விசேஷ நாட்களில் நம் வீடுகளில் குத்து விளக்கு ஏற்றும்போது தரையில் அமர்ந்த நிலையில் தான் குத்து விளக்கின் ஐந்து முகங்களையும் ஏற்ற வேண்டும்.
 
விளக்கு ஏற்றும் திசை பலன்கள்: கிழக்கு திசை நோக்கி விளக்கு ஏற்றுவதினால் துன்பங்கள் நீங்கி, குடும்பம் அபிவிருத்தியாகும். மேற்கு திசையை நோக்கி விளக்கு ஏற்றுவதினால் கடன் தொல்லை நீங்கும், தோஷங்கள் போகும். 
 
வடக்கு திசையை நோக்கி விளக்கு ஏற்றி வழிபட்டால் திருமண தடை நீங்கும். தெற்கு முகம் என்பது விளக்கு ஏற்றக்கூடாத ஒரு திசையாகும். எனவே நாம் தெற்கு பாத்து விளக்கு ஏற்றவே கூடாது.
 
விளக்கு ஏற்றும் எண்ணெய்: முதலில் விளக்கு ஏற்ற பயன்படுத்த கூடாத எண்ணெய்களை பற்றி தெரிந்து கொள்வோம். சூரியகாந்தி எண்ணெய், கடலை எண்ணெய், சுட்ட எண்ணெயினாலும் வீட்டில் விளக்கு ஏற்ற கூடாது. இவையெல்லாம் நம் வீட்டில் தரித்ரியத்தை கொண்டு வைந்து சேர்க்கும்.
 
நெய்யில் விளக்கு ஏற்றினால் செல்வம் பெருகும். எதை நினைத்து அந்த தீபம் ஏற்றுகிறோமோ அந்த காரியம் நிறைவேறும். நல்லெண்ணெய்யில் விளக்கு ஏற்றினால் ஆரோக்கியத்தை பெற்றுத்தரும். 
 
தேங்காய் எண்ணெயில் விளக்கு ஏற்றினால் வசீகரத்தை உண்டு செய்யும். இலுப்பை எண்ணெயில் விளக்கு ஏற்றினால் சகலகாரியத்திலும் வெற்றியை பெற்று தரும். விளக்கெண்ணெய்யில் தீபம் ஏற்றுவதால் புகழ் உண்டாக்கும். வேப்ப எண்ணெய்யில் விளக்கு ஏற்றினால் கணவன், மனைவி ஒற்றுமையை மேம்படுத்தும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (26-10-2021)!