Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

குளிக்கும்போது பின்பற்றவேண்டிய சில விதிமுறைகள் என்ன தெரியுமா...?

குளிக்கும்போது பின்பற்றவேண்டிய சில விதிமுறைகள் என்ன தெரியுமா...?
குளிக்கும் போது வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி நின்று குளிக்க வேண்டும். கர்மம் செய்த பின்னும், மயானத்திற்கு சென்று வந்தால் மட்டும் தெற்கு நோக்கி நின்று குளிக்கலாம். மேற்கு திசை நோக்கி நின்று குளித்தால் உடல் நோவு வரும். தினமும் கங்கா ஸ்நானம் செய்ய  முடியும்.
குளிக்கும் முன் ஒரு குவளை தண்ணீரில் மோதிர விரலால் ஓம் என்று தியானம் செய்து எழுதுங்கள். அந்த நீர் அப்போது முதல் கங்கை நீராக  மாறிவிடும். ஒரு நிமிட தியானத்தில் "இந்த உடலுக்குள் நீங்களே வந்திருந்து, இதை உங்களுக்கு செய்யும் அபிஷேகமாக ஏற்று கொள்ளுங்கள்"  என்று இறையிடம் வேண்டி கொண்டு குளித்தால், உள்பூசையின் அங்கமாக இறைவனுக்கு அபிஷேகமும் ஆகிவிடும்.
 
அக்னி எப்போதும் மேல்நோக்கியே பயணிக்கும். உடலுக்குள் இருக்கும் அக்னி கீழிருந்து மேல் ஏறுவதுதான் சரி. தண்ணீரை கால் முதல் மேல்  நோக்கி நனைத்து வந்து கடைசியில் தலையில் ஊற்றி கொள்ள வேண்டும். நமது மண்டை ஓடுக்கு எப்படிப்பட்ட அக்னியின் வேகத்தையும்  தாங்குகிற சக்தி உண்டு.
 
காலில் இருந்து பரவும் குளிர்ச்சி மேல் நோக்கி பயணிக்கும் போது உள் அக்னியானது தலையை நோக்கி பயணிக்கும். அதுவே சரியான  முறை. தலை முதல் கால் வரை உள்ள பின் பாகத்தை "பிரஷ்டம்" என்பர். அதில் நம் முதுகு பாகம் தான் மிகப்பெரியது. அங்கு தான்  அக்னியின் வீச்சம் கூடுதல் வேகமாக பரவும். ஆதலால், குளித்து முடித்தவுடன், முதலில் முதுகு பாகத்தைதான் துவட்ட வேண்டும்.
 
குளிக்கும் நீரிலே டவலை நனைத்து பிழிந்து துவட்டுவது தான் உத்தமம். அனேகமாக, அனைவரும் ஈரம் படாத துண்டைத்தான் உபயோகிப்பீர்கள். உலர்ந்த துணியானது உள் சூட்டை வேகமாக பரவ செய்து பலவித உள் நோவுகளை உருவாக்கும்.
 
பிறருடன் வாய் திறந்து பேசக் கூடாத மூன்று நேரங்களில் ஒன்று குளிக்கும் நேரம். மௌனத்தை கடைபிடிக்கலாம், அல்லது மனதளவில் தெரிந்த ஜெபத்தை செய்யலாம். குளிப்பதினால், பஞ்ச இந்த்ரியகளால் செய்த தவறுகளினால் நமக்குள் சேர்த்து வைத்துள்ள கர்மாக்கள் களைய  பெறுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (15-11-2019)!