சூரிய கிரகணத்தின் போது மக்கள் செய்ய வேண்டிய செயல்கள் மற்றும் செய்யக் கூடாத செயல்கள் சில உள்ளது. இவை மனிதர்களின் உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது என்று நம்பப்படுகிறது.
சூரியனின் ஒளி வீச்சு பூமி மீது பதியாமல் தடைபடுகிற பொழுது, இயற்கையில் சில மாற்றங்கள் தானாகவே நிகழ்ந்துவிடுகின்றன. இதில், நல்லதை விட கெடுதலே அதிகம் நடக்கிறது.
செய்ய வேண்டிய செயல்கள் என்ன..?
சூரிய கிரகணத்திற்குப் பிறகு குளித்துவிட்டு புதிய ஆடைகளை மாற்றுவதை இந்தியாவில் பலரும் பின்பற்றுகின்றனர். கர்ப்பிணிப் பெண்கள் குழந்தைக்கு ஏற்படும் மோசமான விளைவுகளைத் தவிர்ப்பதற்காக வீட்டுக்குள் இருக்க வலியுறுத்தப்படுகிறார்கள்.
கிரகணத்திற்கு முன்பு சமைக்கப்படும் எந்த உணவையும் உண்பது சில உபாதைகளை உருவாகும் என்று கூறப்படுகிறது. சூரிய பகவான் மற்றும் இறைவனைத் மனதில் வழிபடுதல் போன்ற செயல்களை மக்கள் பின்பற்றி வருகின்றனர்.
செய்ய கூடாத செயல்கள் என்ன..?
கிரகணத்தின் போது மக்கள் உணவு அருந்துதல் மற்றும் நீர் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். கிரகணத்தின் போது பயணிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
எந்தவொரு புனிதமான செயல்களைச் செய்யக் கூடாது. கிரகணத்தின் போது குடிநீரைப் பயன்படுத்தக் கூடாது. நேரடியாகச் சூரிய கிரகணத்தைப் பார்வையிடக் கூடாது. சமையல் செய்யக் கூடாது. நகம் கிள்ளக் கூடாது. எந்த வேலையும் செய்யக்கூடாது.