சித்ரகுப்த பூஜையை முறையாக பூஜை செய்தால் உயர்நிலை அடையலாம் என்பது திண்ணம். கேது பகவானின் அதிதேவதை சித்ரகுப்தர். ஆகையால் சித்ரகுப்தரை வணங்குவதால் கேதுவினால் துன்பம் உண்டாகாது.
எமதர்மனிடம் கணக்கராக பணி புரிபவர் சித்ரகுப்தர் ஆவார், இவர் மனிதர்களின் பாவ புண்ணிய கணக்குகளை எழுதும் பணியை செய்து வருகிறார். இவருக்கு தமிழகத்தில் இரண்டு இடங்களில் மட்டுமே தனி கோவில் உள்ளது. தேனி மாவட்டம் சின்னமனூரில் உள்ள மாணிக்கவாசகர் கோவிலில் சிவனார் சன்னதிக்கு எதிரே ஒரு தனி சன்னதியில் சித்ரகுப்தர் உள்ளர்.
இந்த சன்னதியில் வலது கரத்தில் எழுத்தாணி உடனும் இடது கரத்தில் ஏடு தாங்கி தியான நிலையில் அவர் காட்சி தருகிறார். சித்ரகுப்தர்க்கு மற்றொரு கோவில் காஞ்சிபுரத்தில் தனி கோவிலாக அமைந்துள்ளது.
இதை தவிர தேனி மாவட்டம் போடி அருகே உள்ள கோடாங்கி பட்டி எமதர்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமி தினத்தன்று சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகிறது. இதைப்போன்று கோவை அருகே உள்ள சிங்காநல்லூர் எமதர்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா சிறப்பாக நடைப்பெறுகிறது. இவ்வாறு சித்ரகுப்தரை வழிபடுவதன் மூலம் வாணிபம் சிறக்கும், ஆயுள் பலம் கூடும் என்பது நம்பிக்கை.