Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

முன்னோர்கள் கோவில்களை அதிகம் ஏற்படுத்தியது ஏன் தெரியுமா...?

முன்னோர்கள் கோவில்களை அதிகம் ஏற்படுத்தியது ஏன் தெரியுமா...?
கோயில் என்பது அறிவியல் பூர்வமாக மனிதனுக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல நன்மைகள் கிடைப்பதற்காக முன்னோர்களால் அமைக்கப்பட்ட இடம்  ஆகும்.

சாஸ்திரப்படி அமைக்கப்படும் கோயில்கள், பூமியின் காந்த அலைகள் அடர்த்தியாக பாயும் இடத்தில் அமைகின்றன. ஊர்க்கோடியிலோ, ஊர்நடுவிலோ, மலையுச்சியிலோ என கோயிலுக்கென்று இடம் அந்தக்காலத்தில் அமைக்கப்பட்டது இந்த அடிப்படையில் தான்.
 
இந்த உயர் காந்த அலைகள் அடர்ந்திருக்கும் இடத்தின் மையப்பகுதியில் கர்ப்பக்கிருகம் அமைக்கப்படுகிறது. அதனால்தான் கர்ப்பக்கிருகத்தில் மூல விக்கிரகத்தின் அடியில், யந்திரங்கள் பதித்தார்கள். சில உயரிய மந்திரங்கள் பொறிக்கப்பட்ட செப்புத்தகடுகளே அந்த யந்திரங்கள். பூமியின் காந்த அலைகளை செப்புத்தகடுகள்  உள்வாங்கி சுற்றுப்புறத்துக்கு அதைப் பாய்ச்சுகிறது.
 
இந்த அறிவியல் அடிப்படையில்தான் மின்சாரத்தைக் கொண்டு செல்ல செப்புக் கம்பிகளை பயன்படுத்துகின்றனர். கர்ப்பக்கிருகத்தை பிரதட்சணமாக சுற்றும்  பக்தர்களின் உடலில், தானாகவே இந்த காந்த சக்தி மென்மையாகப் பாய்கிறது. அடிக்கடி கோயிலுக்கு வந்து பிரதட்சணம் செய்யச் செய்ய இந்த காந்த சக்தி  உடலில் கணிசமாக அதிகரிக்கிறது.
 
இதனால் உடலில் பாஸிடிவ் எனர்ஜி உண்டாகிறது. இந்தச் சக்தி பூரணமாக பக்தர்களை சென்றடைவதற்காகவே, கர்ப்பகிரகம் மூன்று பக்கமும் ஜன்னல்கள் இல்லாமல் அமைக்கப்படுகிறது.
 
கோயிலில் ஒலிக்கும் மணிச் சத்தமும், பூஜை மந்திர ஒலிகளும் சவுண்ட் எனர்ஜியைத் தருகின்றன. கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு வழங்கப்படும் தீர்த்தத்தில்  ஏலக்காய், துளசி, கிராம்பு போன்றவை கலக்கப்படுகின்றன. இவை அனைத்தும் உடலை நோயிலிருந்து காக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று உங்களுக்கான நாள் எப்படி? - 04/05/2021