காலை மாலையில் தீபம் ஏற்றுவது நமது வீட்டில் முக்கியமான சம்பிராதாயங்களுள் ஒன்றாகவுள்ளது. தீப ஒளி இருள் என்ற அறியாமையைப் போக்கி அருள் என்ற ஆன்மாவை ஆற்றல் மிக்கதாக்குகின்றது.
தீபத்தில் மூன்று தேவிகளான துர்கை, சரஸ்வதி, லட்சமி மூன்று சக்தியும் தீபத்தில் இருப்பதால் ஒளிமயமான முன்னேற்றம் வீட்டில் கிடைக்கின்றது. தீபம் ஏற்றி தினமும் பூஜை செய்வதால் மனதில் தோன்றும் குழப்பங்களைப் போக்க முடியும். இது உள்ளத்தின் இருளை போக்குகிறது. வாழ்வில் உயரத்தை கொடுக்கின்றது.
மனதில் ஏற்படும் கவலை, துன்பங்கள், தீய சிந்தனைகள் ஏற்படாத வண்ணம் தடுக்கிறது. இதனால் தான் தினமும் பெண்கள் வீட்டில் விளக்கேற்ற வேண்டும் என்று முன்னோர்கள், பெரியோர்கள் கட்டாயமாகச் செய்ய பணிப்பார்கள்.
தினமும் காலை அல்லது மாலை நேரத்தில் பூஜை செய்து விளக்கு ஏற்றும் வீட்டில் லட்சுமி தேவி வாசம் செய்கின்றாள் என்கின்ற ஒரு தார்பரியம் உண்டு. விளக்கேற்றுவது லட்சுமியின் சொருபமான பெண்கள்தான் ஏற்ற்வார்கள் தவிர்க்க முடியாத காரணத்தால் ஆண்கள் செய்யலாம். பொதுவாக தீப ஏற்றுவது வீட்டில் உள்ள பெண்கள் செய்தால் சிறப்பாக இருக்கும்.
தினமும் காலை மாலை வீடு பெருக்கி விளக்கேற்றி பூஜை செய்வது நமது வாழ்வியல் கோவிலில் கூட்டாக தீப வழிபாடு செய்யலாம். சாமி படத்திற்கு முன் விளக்கேற்றி சுலோகம் அல்லது கடவுளின் பெயரை உச்சரிக்கலாம். வீட்டில் அரை மணி நேரமாவது விளக்கு தீபம் எரிய வேண்டியது அவசியம் ஆகும்.