தினசரி குளிக்கும் முன் பசுந்தயிரை உடல் முழுவதும்தடவி சிறிது நேரம் சென்று குளிக்க தரித்திரம் விலகும். குளித்தவுடன் முதுகை முதலில் துடைக்கவும் தரித்திரம் விலகும்.
குடியிருக்கும் வீட்டில் வடகிழக்கு பகுதியில் கிணறு,நெல்லி மரம், வில்வ மரம் இருக்க அந்த வீட்டில் லஷ்மி கடாட்சம் ஏற்படும்.
தினமும் காலையில் வெங்கடேச சுப்ரபாதம், விஷ்ணுசஹஸ்ரநாமம் ஒலிக்கும் வீட்டில் லஷ்மி நித்தமும் வாசம்செய்வாள்.
மகாலட்சுமிக்கு இளஞ்சிவப்பு நிற வஸ்திரம் சாத்தி வழிபடவசியமுண்டாகி செல்வ வரத்து உண்டாகும்.
அவரவர் நட்சத்திர தன தாரை ஓரை வெள்ளிக்கிழமைவரும் வேளையில் அரசமரத்தடி விநாயகருக்கு அகலில் 11 தீபமும், 11 முறை வலம் வந்து வழிபட்டால் பணவரவு நிரந்தரமாகும்.
வீட்டில் தலை வாசல் படியில் கஜலஷ்மி உருவத்தைவெள்ளி தகட்டில் பதித்து வைத்தால் செல்வம் சேர்ந்துகொண்டே இருக்கும்.
ஒவ்வொரு மாதத்தில் வரும் பெளர்ணமியன்று சத்தியநாராயண பூஜை செய்ய செல்வங்களை பெறலாம்.
ஐப்பசி மாத வளர்பிறையில் மகாலட்சுமியை வழிபடசெல்வம் பெருகும்.
தொடர்ந்து 11 பெளர்ணமி அன்று இரவு 8.30 மணிக்குசொர்ணாகர்ஷன பைரவருக்கு தாமரை மாலைஅணிவித்து பிரசாதமாக அவல், பாயாசம் படைத்து வழிபடசொர்ண ஆகர்ஷணமாகும்.