குபேர முத்திரை பொருளாதார வசதிகளை பெருக்கும். பெரு விரல், ஆள்காட்டி விரல், நடு விரல் ஆகிய மூன்று விரல்களின் நுனிகளை ஒன்றோடொன்றாக இணைத்து மெதுவாக அழுத்தி பிடிக்கவேண்டும். மோதிர விரலையும், சுண்டு விரலையும் உள்ளங்கையை தொடுமாறு மடக்கி பிடிக்கவேண்டும்.
இவ்வாறு செய்யும் முத்திரைக்கு குபேர முத்திரை என்று பெயர். இந்த முத்த்ரையை நேர கணக்கு எதுவும் வைத்துக்கொள்ளாமல் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் செய்யலாம்.
குபேரன், செல்வத்தின் அதிபதி. ஆனால், புத்த மதத்திலோ குபேரன் என்ற சொல் ‘சர்வ அனுபூதி’ எனப்படுகிறது. இந்த குபேர முத்திரை, நம் ஆழ்மனதைத் திறக்கும் சாவியைப்போல செயல்படுகிறது. உடல்நலம், மனநலம், வளமான வாழ்க்கை, உயர்ந்த லட்சியங்கள், தன்னம்பிக்கை ஆகியவற்றை அடையத் துணைபுரிகிறது. இந்த முத்திரையை செய்வதால் மனதில் உள்ள ஆசைகள் விரைவில் நிறைவேறும். பொருளாதார பற்றாக்குறைகள் விரைவில் நீங்கும்.
பெருவிரல் சுக்கிரனையும், ஆள் காட்டி விரல் குருவையும், நடு விரல் சனியையும் குறிக்கும். இந்த மூன்று விரலையும் சேர்த்து பிடிப்பதால் சனி, குரு, சுக்கிரன் சேர்க்கை ஏற்படுகிறது. இந்த கிரக சேர்க்கை பொருளாதார வசதிகளை பெருக்கும் கிரக சேர்க்கையாகும்.