வெள்ளெருக்கு செடிகள் பெரும்பாலும் தாமாகவே வளரக்கூடியவை. சூரியனுக்குரிய மூலிகையாக கருதப்படுகிறது. மேலும் இந்த செடிகள் இருக்கும் இடத்தில் பாம்புகள் வருவதில்லை என்று நம்பப்படுகிறது.
வெள்ளெருக்கு செடியிலிருந்து கிடைக்கும் பட்டை மூலம் திரி செய்து விளக்கில் தீபம் ஏற்றி வந்தால் எல்லா விதமான எதிர்மறைகளும் விலகி விடும் என்பது நம்பிக்கை.
எருக்கம்பூ, அருகம்புல், வன்னி இலை, அத்தர், ஜவ்வாது, புணுகு போன்ற வாசனைப் பொருட்களை பூசியும் இறைவன வழிபடலாம். இவ்வாறு செய்வதன் மூலம் வீட்டில் மகிழ்ச்சியும், மன அமைதியும் உண்டாகும்.
சிவபெருமானுக்கு மிகவும் பிடித்தமானது இந்த எருக்கம்பூ தான் என்று நாயன்மார்கள் சிலர் கூறியிருக்கிறார்கள். மேலும் வெள்ளெருக்கை தேவ மூலிகை என்றும் ஒரு சிலர் கூறுவார்கள். வெள்ளெருக்கு விநாயகர் சிலை செய்ய வெள்ளை நிற பூக்கள் கொண்ட எருக்கன் செடியை தான் தேர்வு செய்வார்கள்.
இல்லறத்திற்கும், துறவறத்திற்கும் விநாயகர் வழிபாடு சிறந்தது. பூவை வைத்து விநாயகருக்கும் சிவனுக்கும் அர்ச்சனை செய்யலாம். வெள்ளெருக்கம் பூ சங்கை பஸ்மமாக்க பயன்படுகிறது.
ஆகர்ஷணம் எட்டு வகைப்படும். இதில் தன ஆகர்ஷணம் என்னும் பண வரவை கொடுக்கக்கூடியது இந்த வெள்ளெருக்கு விநாயகர்.
வெள்ளெருக்கு விநாயகர் என பல இடங்களில் விற்பனை செய்கின்றார்கள். வெள்ளெருக்கு விநாயகரை வீட்டில் வைத்தால் இல்லம் முழுவதும் வெள்ளெருக்கு கதிர் வீச்சின் மூலம் வெள்ளெருக்கு விநாயகர் மகிமை உணரலாம்.
வெள்ளெருக்கு விநாயகர் வழிபாடு அளப்பரிய பலன்களை தருகிறது. இதை அவரவர்கள் அனுபவத்தில் உணர முடியும். சொர்ண கணபதி மந்திரம் சொல்லி, வெள்ளெருக்கு விநாயகரை வழிபட்டால், தனம் ஆகர்ஷணம் ஆகும்.