Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

திருஷ்டி கழிக்க எலுமிச்சையை பயன்படுத்துவது ஏன் தெரியுமா...?

திருஷ்டி கழிக்க எலுமிச்சையை பயன்படுத்துவது ஏன் தெரியுமா...?
பொறாமையுடன் தீய எண்ணத்துடன் நம்மை ஒருவர் பார்த்தால், அவரது பார்வையே நம்மை பாதிக்கச் செய்யும் இதையே திருஷ்டி என்கிறார்கள். இவ்வாறு  ஏற்படும் திருஷ்டி தோஷத்தைப் போக்க பல வழிமுறைகள் காணப்படுகின்றன. இவைகளில் ஒன்றுதான் எலுமிச்சம் பழம்.
எலுமிச்சையை நான்காக கீறி உள்ளே குங்குமம் வைத்து தலையைச் சுற்றி பிழிந்து விட வேண்டும். பின்பு நான்கு துண்டுகளையும் மூலைக்கு ஒன்றாக வீசி  விட வேண்டும்.வீட்டு வாசலில் வைத்து காலை வேளையில் இந்த சடங்கை செய்து விட வேண்டும். இரவில் துருஷ்டி கழிப்பதாக இருந்தால் கற்பூரத்தை சுற்றி  எரித்தாலே போதும்.
 
எலுமிச்சம் பழத்தின் மூலம் திருஷ்டி தோஷத்தை விலக்கலாம். நல்ல பழுத்த மஞ்சள் நிறமுள்ள எலுமிச்சம் பழத்தை இரண்டாகப் பிளந்து குங்குமம் தடவி, யாருக்கு திருஷ்டி இருக்கிறதோ, அவரை சீரியனை நோக்கி நிற்க வைத்தோ அல்லது உட்கார வைத்தோ, மூன்று முறை எலுமிச்சம் பழத்தால் சுற்றி, அதை  கிழக்கு தெற்கு வடக்கு என நான்க் திசைகளிலும் விட்டெரிதலே திருஷ்டி ஆகும்.
webdunia
எலுமிச்சம் பழத்தில் குங்குமம் தடவி திருஷ்டி கழிக்கப்பட்ட எலுமிச்சம் பழத்தை, அந்தப் பழம் காய்ந்துபோகும் வரை காலால் மிதிப்பதோ, கையால் தொடுவதோ  கூடாது. எலுமிச்சம் பழத்துக்கு திருஷ்டி தோஷத்தை விலக்கும் சக்தி உண்டு என்பதால் இவ்வாறு செய்யப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பசுவிற்கு அகத்திக் கீரை கொடுத்து வழிபாடு ஏன்?