Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

சங்கை வைத்து வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்...!

சங்கை வைத்து வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்...!
காயத்ரி தேவதையின் கைகளில் சங்கு உள்ளது. வராகி, ராஜசியாமளா, திரிபுரசுந்தரி போன்ற சக்த இறைவியருக்கு சங்கு மாலை தோடு, மூக்குத்தி இருப்பதாக அறிவோம். ஸ்ரீவித்யா என்னும் தேவி உபாசனையில் சங்கு பூஜையின்றி விரிவான பூஜை ஏதும் இராது.
சங்கினை வர்ணனனுடைய பிராணன் என்று வேதம் விரிக்கின்றது. அது இருக்குமிடம் சுத்தமாகும். தூய்மை ஏற்படும், சங்கினில் மூலமந்திர  ஆஹாவன் செய்து அந்தப் புனித நீரை இறை உருவங்களுக்கு அபிஷேகம் செய்வது மரபு. இதன் காரணமாக தேவ பிம்பங்கள் பிரம்ப சுத்தி  அடைகின்றன.
 
தாமிரபரணி ஆறு தாம்ர சத்துக்களையுடையது. காவிரி ஆறு தங்கத்தின் ரஸம் உடையது.தாமிரபரணி ஆறு கடலுடன் சங்கமம் ஆகும்  இடத்தில் சங்குகள் விழைகின்றன். இங்கு இடம்புரி, வலம்புரிச்சங்குகள் விளைகின்றன. மிகப் புனிதமான சங்குகளை வீட்டில  வைத்திருப்பதால் வாழ்வில் சுபிட்சத்தினைக் காணலாம்.

தாமரையும், சங்கும் இருக்கும் இல்லத்தில் பிருத்வி தனமான தங்கமும், சமுத்திர தனங்களான முத்தும் இதர கடல் வகைச் செல்வங்களும் தங்கும். குபேரலஷ்மி மந்திரத்தால் சங்கு பூஜை செய்து அந்த நீரைக் கொண்டு  மகாலஷ்மிக்கு அபிஷேகம் செய்தால் பெரும் செல்வம் எற்படும்.
 
நல்ல பலமான மூச்சு சக்தி உள்ளவர்களே இதனை ஊதி இசை எழுப்ப முடியும். வாஸ்து பிரயோகங்களில் மயன், விஸ்வகர்மா ஆகியோர் நூல்களில் சங்குஸ்தாபன முகூர்த்தம் என ஒரு ஒரு பிரயோகம் கூறப்பட்டுள்ளது.
 
சங்கின் மீது நவரத்தினங்களைப் பதித்து அதனை ஒரு வேங்கை மரப்பெட்டியில்,நண்டு வளைமண், ஆற்று மண், புற்று மண் இவைகளை இட்டுப் பூஜை அறையில் வைப்பதால் நிலையான ஐஸ்வரியம் ஏற்படும் என இந்நூல்களில் கூறப்பட்டுள்ளன. ஒரு சுடுகாட்டில் சங்கினை  பதித்தாலும் கூட அங்குள்ள துர்மரண ஆவிகள் வெளியேறிவிடும் என்று வாஸ்து நூல்கள் கூறுகின்றன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (19-12-2018)!