Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆஞ்சநேயர் வழிப்பாடு என்ன பலன்களை பெற்றுத்தரும் தெரியுமா...?

Webdunia
வானர தேச அரசன் கேசரிக்கும், அஞ்சனைக்கும் மணம் முடிக்கப்பட்டது. இவர்கள் குழந்தைக்காக ஏங்கி தவம் இருந்தனர். இதன் காரணமாக மனம் மகிழ்ந்த வாயுதேவன் சிவசக்தி வடிவான கனி ஒன்றை அஞ்சனை கொடுத்தார்.
சில காலங்களில் கர்ப்பம் தரித்த அவளுக்கு மார்கழி மாதாம் மூல நட்சத்திரம் கூடிய நன்னாளில் அஞ்சனாதேவிக்கு ஆண் குழந்தை பிறந்தது. அவர் ஆஞ்சநேயர் என்று அழைக்கப்பட்டார். ஆஞ்சநேயர் வனவாசம் வந்த ஸ்ரீராமனுக்கு எந்தவித பிரதிபலனையும் கருதாமல் தூய  அன்புடனும் பக்தியுடனும் தொண்டு செய்தார்.
 
இலங்கையிலிருந்து சீதையை வணங்கி அனுமன் விடை பெற்றுக் கொள்ளும்போது, சீதை தன் அருகில் இருந்த வெற்றிலைக் கொடியில் இருந்து ஓர் இலையைக் கிள்ளி அனுமன் தலையில் போட்டு வாழ்த்தியதால் அவருக்கு வெற்றிலை மாலை அணிவித்து நாம் அவரது  ஆசியைப் பெறலாம்.
* ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்றினால் தடை நீங்கி கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும்.
 
* ஸ்ரீராம ஜெயம் எழுதி மாலை சூட்டிப் போட்டால் அனைத்துச் செயலும் வெற்றியாகவே முடியும்.
 
* ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
 
* துளசி மாலை சாற்றினால் பாவங்களில் இருந்து நிவர்த்தி உண்டாகும்.
 
* வடை மாலை சாற்றினால் வழக்குகளில் வெற்றியும் கிட்டும்.
 
* குறிப்பாக சனிப் பெயர்ச்சி நடப்பவர்கள் அனுமனை வணங்கி வருவது பல சங்கடங்களைப் போக்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments